Thai Amavasai 2025: தை அமாவாசை 2025: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரத்தில் அலைமோதும் கூட்டம்..!
முன்னோர்களின் ஆசியை பெற முக்கிய அமாவாசையாக கருதப்படும் தை திதி அமாவாசை இன்று சிறப்பிக்கப்படுகிறது.
ஜனவரி 29, ராமேஸ்வரம் (Spiritual News Tamil): தமிழக ஆன்மீக பக்தர்கள், தங்களின் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க முக்கிய நாளாக கருதப்படும் தை மாதத்தின் அமாவாசை திதி, தை அமாவாசை அன்று முன்னோரை வணங்கி தர்ப்பணம் கொடுப்பார்கள். அமாவாசையில், தை அமாவாசை முக்கிய ஒன்றாகவும் கருதப்படுகிறது. தன்னுடன் வாழ்ந்து மறைந்த முன்னோரை நினைவுகூர்ந்து, அவர்களின் ஆன்மா சாந்தியடையும் நோக்கத்துடன் கொடுக்கப்படும் தர்ப்பணம், பல எதிர்கால சந்ததிக்கு நல்வழிப்படுத்தும் விஷயமாகவும் அமைகிறது. அதேபோல, பித்ரு எனப்படும் முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகியவர்கள், தை மாத அமாவாசை தினத்தில் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுப்பது, வருத்தத்தில் இருக்கும் முன்னோரின் ஆசியை பெற உதவும் எனவும் நம்பப்படுகிறது.
2025 ம் ஆண்டுக்கான தை அமாவாசை (Thai Amavasai 2025):
2025ஆம் ஆண்டின் முதல் அமாவாசை தை அமாவாசை, ஜனவரி 29, 2025 புதன்கிழமை அன்று சிறப்பிக்கப்படுகிறது. ஜனவரி 28, 2025 அன்று இரவு 08.10 மணிக்கு தொடங்கும் அமாவாசை திதி ஜனவரி 29, 2025 இரவு 07.21 மணி வரை நீடிக்கிறது. Kitchen Tips: சமையலில் நீங்க சிறந்து விளங்கணுமா? உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.!
முன்னோர்களின் ஆசியை பெறுங்கள்:
பித்ரு சாபத்தின் காரணமாக அவதிப்படும் நபர்கள், சிறந்த எதிர்காலம் அமையாமல், சுபகாரியம் கைகூட வழியில்லாமல் தவிப்பார்கள். பல தடைகளும் அவர்களின் வாழ்வில் உண்டாகும். அந்த தடைகளை அகற்றும் தன்மை தை அமாவாசைக்கு உண்டு என்பது ஆன்மீக நபர்களின் நம்பிக்கை. நமது வாழ்வில் நாம் செய்யும் நல்-தீ வினைகளை பொறுத்து, கர்மபலன் என்பது நமக்கும், நமது சந்ததிகளுக்கும் நிர்ணயம் செய்யப்படும். ஒருசில காரணங்களால் நாம் நமது முன்னோர்களை மறுக்கும்போது, அவர்கள் நம் மீது கோபம் அடைவார்கள். அவர்கள் தொடர்ந்து கோபத்துடன், வருத்தத்துடன் இருந்தால் சந்ததியில் முன்னேற்றம் இருக்காது. அவர்களின் கோபத்தை தணிக்கவும், தணிந்த கோபத்துடன் அவர்கள் நல்லாசி வழங்குவதால் வாழ்க்கையில் முன்னேற்றமும் கிடைக்கும். இதனால் தை அமாவாசை முக்கியத்துவம் பெறுகிறது. அன்றய நாளில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட வேண்டும். இதனால் திருமண தடை அகலும், குழந்தை பிறப்பு கைகூடும், கர்மவினை சரியாகும். குடும்பம் முன்னேறும், செல்வம் பெருகும்.
தர்ப்பணம் கொடுக்க குவியும் மக்கள்:
தை அமாவாசை விரதம் வழிபாடு என்றாலே நாட்டின் வடக்கு பகுதியில் கங்கை நதி ஓடும் காசி, அதற்கு அடுத்தப்படியாக தென் தமிழகத்தில் ராமேஸ்வரம் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கடலில் புனித நீராடவும் தங்களுடைய முன்னோர்களுடைய திதி, தர்ப்பணம் கொடுத்து விட்டு அருள்மிகு ஸ்ரீ ராமநாதசுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவதும் வழக்கம். இந்த நிலையில், தை அமாவாசையை முன்னிட்டு இன்று (ஜன. 29) ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கோவிலில் சாமியை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்துள்ளனர். Today Rasi Palan: இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் என்னென்ன? இந்த ராசிக்காரர்களெல்லாம் உஷார்.!
திருச்சியில் அம்மா மண்டபம் படித்துறை அருகே காவிரி ஆற்றில் நீராடி பின்னர் தங்களது மூதாதையர்களுக்கு திதி கொடுத்து, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபாடு செய்து வருகின்றனர். தொடர்ந்து காவிரி தாயாரையும் பின்னர் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சமயபுரம் உள்ளிட்ட ஆலயங்களுக்குச் சென்றும் வழிபாடு செய்து வருகின்றனர். திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆலயம், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இருக்கும் மாசாணியம்மன் கோவில், மயிலாடுதுறை மாவட்டத்தில் திருஇந்தளூரில் பரிமள ரங்கநாதர் கோவில், கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமலையான் கோவில், திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இருக்கும் அமண லிங்கேஸ்வரர் கோயில் ஆகிய கோவில்களிலும் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
ராமேஸ்வரம் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்:
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த மக்கள்:
தர்ப்பணம் கொடுக்க அலைமோதும் கூட்டம்:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)