Independence Day 2024: களைகட்டிய 78வது சுதந்திர தின கொண்டாட்டம்; வாழ்த்து அட்டைகள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இங்கே..!
இந்தியா தனது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடுகிறது.
ஆகஸ்ட் 14, புதுடெல்லி (New Delhi): Independence Day 2024 Images & Wishes WhatsApp Status Messages, HD Wallpapers, Quotes and SMS To Share on:
ஒரு காலத்தில் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் சிக்கியிருந்த இந்தியா, நீண்ட கால போராட்டத்திற்குப் பிறகு 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் பெற்றது. இந்த சுதந்திரம் எளிதில் கிடைத்ததல்ல. பல தியாகிகள் தங்கள் உயிரையும், இளமைப் பருவத்தையும் இழந்து, இந்தியாவுக்கு சுதந்திரம் தேடித் தந்தனர்.
சுதந்திர தினம்: 1857-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான முதல் பெரிய கலகம் வெடித்தது. பின்னர், சுதேசி இயக்கம், காந்தியடிகளின் வருகை, சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பல போராட்டங்களினால் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்டு சுதந்திர நாடானது. சுதந்திரத்திற்குப் பின் இந்தியா பல பிரச்சினைகளை எதிர்கொண்டது. அனால் இன்று தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. சுதந்திர தினம் (Independence Day) என்பது வெறும் ஒரு நாள் அல்ல. அது நம் நாட்டின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாகும்.
இந்த சிறப்பான நாளில் உங்கள் அன்பானவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க மறக்காதீர்கள். நாட்டின் பெருமையைக் கொண்டாட உங்களின் அன்பானவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவியுங்கள். Is It The 77th Or 78th Independence Day?: இந்தியாவின் 2024 சுதந்திர தின விழா 77ம் ஆண்டா? 78 ஆ?? விபரம் இதோ..!
வாழ்த்து தெரிவிப்பதற்கான சில புகைப்படங்களை இங்கு பார்ப்போம்.
1)நமது தேசம் நமது குடும்பம்
ஒவ்வொரு குடும்பமும்
நமது தேசத்தின் தூண்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
2)தேசம் மீது நேசம் கொண்ட அனைவருக்கும்
சுதந்திர தின வாழ்த்துக்கள்
3)சுதந்திரம் தைரியமாக இருப்பதில் உள்ளது
அதை குடும்பமாக அரவணைப்போம்
சுதந்திர தின வாழ்த்துக்கள்
4)நம் முன்னோர்கள்
போராடி பெற்ற
சுதந்திரத்தை போற்றுவோம்
எதிர்கால சந்ததியினருக்காக
அதை பாதுகாப்பதை
உறுதி செய்வோம்
சுதந்திர தின வாழ்த்துக்கள்
5)பாரத தேசத்தின் மக்கள் அனைவருக்கும்
இனிய சுதந்திர தின வாழ்த்துகள்
6)பாசத்திற்குரிய இந்திய சொந்தங்களே
என இதயம் நிறைந்த
சுதந்திர தின வாழ்த்துகள்
7) பாருக்குள்ளே நல்ல நாடாம்
எங்கள் பாரத நாட்டின்
சுதந்திர தின வாழ்த்துக்கள்
8)உதிரங்களை உரமாக்கி
உதித்த சரித்திரம் நம் சுதந்திரம்
சுதந்திர தின வாழ்த்துக்கள்
9)சுதந்திரம் பரிசு அல்ல
அது பிறப்புரிமை
சுதந்திர தின வாழ்த்துக்கள்
10)போராடி பெற்றுவிட்டோம்
சுதந்திரத்தை..!
கொண்டாடி மகிழ்வோம்
சுதந்திர தினத்தை ..!
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
(The above story first appeared on LatestLY on Aug 14, 2024 08:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

