ஆகஸ்ட் 13, புதுடெல்லி (New Delhi): ஒரு காலத்தில் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் சிக்கியிருந்த இந்தியா, நீண்ட கால போராட்டத்திற்குப் பிறகு 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் பெற்றது. இந்த சுதந்திரம் எளிதில் கிடைத்ததல்ல. பல தியாகிகள் தங்கள் உயிரையும், இளமைப் பருவத்தையும் இழந்து, இந்தியாவுக்கு சுதந்திரம் தேடித் தந்தனர்.
சுதந்திர தினம்: 1857-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான முதல் பெரிய கலகம் வெடித்தது. பின்னர், சுதேசி இயக்கம், காந்தியடிகளின் வருகை, சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பல போராட்டங்களினால் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்டு சுதந்திர நாடானது. சுதந்திரத்திற்குப் பின் இந்தியா பல பிரச்சினைகளை எதிர்கொண்டது. அனால் இன்று தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. சுதந்திர தினம் (Independence Day) என்பது வெறும் ஒரு நாள் அல்ல. அது நம் நாட்டின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாகும். Madras High Court Order: சுதந்திர தினத்தில் தேசியக்கொடியேற்ற தடுப்பவர்கள் மீது குண்டாஸ்.. சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!
ஆனால் இந்த ஆண்டு கொண்டாடப்படும் இந்திய சுதந்திர தினம் எத்தனையாவது வருடம் என்பதில் சிறிது குழப்பம் இருக்கிறது. 2023-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75வது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது. இதற்கு 'ஆஸாதி கா அம்ரித் மகோத்சவ்' என்று பெயரிடப்பட்டது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுவதால், நாம் இப்போது கொண்டாடும் சுதந்திர தினம் 78வது கொண்டாட்டமாகும். இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 77 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கிறது. மேலும் 78வது கொண்டாட்டம், சுதந்திர தினத்தை கொண்டாடும் எண்ணிக்கையைக் குறிக்கிறது.