International Friendship Day 2024: "எதிர்பார்ப்புகளே இல்லாமல் இணைந்திருக்கும் ஒரு உறவு நட்பு" சர்வதேச நட்பு தினம்..!
சர்வதேச நட்பு தினத்தில் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க சில அன்பான செய்திகள் இங்கே..
ஜூலை 30, சென்னை (Chennai): International Friendship Day 2024 Images & Wishes WhatsApp Status Messages, HD Wallpapers, Quotes and SMS To Share on International Friendship Day:
நட்பு என்ற வார்த்தை இந்த உலகில் உலவும் வரை இங்கு யாரும் அனாதை இல்லை. நட்பு என்பது மனிதர்களுக்கு இடையே உள்ள மிக அழகான உறவுகளில் ஒன்றாகும்.வாழ்க்கையில் விஷயங்கள் தவறாக நடக்கும் போது நம் நம்பிக்கையை அதிகரிக்க, மனச்சோர்விலிருந்து நாம் மீள ஒரே ஒரு உண்மை நண்பன் இருந்தால் போதும். இந்த நட்பின் உறவை கொண்டாட, சர்வதேச நட்பு தினம் (International Friendship Day) ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
வரலாறு: 1958 ஆம் ஆண்டில் சர்வதேச சிவில் அமைப்பு உலக நட்பு அறப்போர் நாடுகளுக்கு இடையே நட்பை உருவாக்கவே, சர்வதேச நட்பு தினம் கொண்டாட முன்மொழிந்தது. இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபை 30 ஜூலை 2011 அன்று நட்பு தினத்தை முறையாக அறிவித்தது. அதன் பிறகு காலப்போக்கில் இனம், மதம் அல்லது மொழியை பொருட்படுத்தாமல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை ஒன்றிணைக்கும் வலுவான நட்பை உற்சாகமாக கொண்டாடும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. Aadi Perukku 2024: மழையையும் மாரியம்மனையும் இணைக்கும் ஆடிப்பெருக்கு; 2024 ஆடிப்பெருக்கு நல்ல நேரம், வழிபாடு முறைகள் விபரம் இதோ.!
நண்பர்கள் தின கவிதைகள்:
உரிமை கொள்ள
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்,
உள்ளதைப் புரிந்து கொள்ள
நண்பா
உன் ஓர் உறவுபோதும்...!!!
நட்பு
ஆழ்கடல் போன்றது...
கரையில் தேடினால்,
சிப்பிகள் கிடைக்கும்...
மூழ்கி தேடினால் தான்
உன்னைப் போல...
முத்துக்கள் கிடைக்கும்....!!!
அருகில் இருக்கும் ...
நட்பை விட தூரத்தில் ...
இருக்கும் நட்புக்கே ....
நட்பின் வலிமையையும் ...
வலியும் புரியும் .....!!!
கட்டியணைத்து ஆறுதல் ...
சொல்ல முடியாதே தவிர ....
நெஞ்சுக்குள் போட்டு ...
தன்னை வருத்தியழும் நட்பு
தூர நட்பு .....!!! International Tiger Day 2024: "புலி புலி புலி.. அட அச்சம் விட்டு உச்சம்தொட்டு வெற்றி பெறும் வீரப்புலி" சர்வதேச புலிகள் தினம்..!
உனக்கு என்ன கவலை ....
இருந்தாலும் தோள் மீது ....
சார்ந்துகொள் .....
என்னை கேட்காமலே ....
தோள் மீது சாய்ந்துகொள் ....!!!
என் தோள் உன் ....
இதய சுமையை இறக்கும் ....
இதய சுமையை தாங்கும் ....
சுமைதாங்கியாய் இருந்தால் ....
உயிர் உள்ளவரை உன்னை
தாங்குவேன் .....!!!
நான் உன் உயிர் நட்பு .....
உன் அத்துனை சுமைகளையும் ....
என்னிடம் கொட்டிவிடு ....
உன் முகத்தில் சிரிப்பையே....
பார்க்க வேண்டும் .....!!!
- (கவிதைக்கு நன்றி, கவிப்புயல் இனியவன்)
(The above story first appeared on LatestLY on Jul 30, 2024 11:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

