ஜூலை 29, புதுடெல்லி (New Delhi): காடுகளின் காவலன் என அழைக்கப்படும் புலி நம் நாட்டின் தேசிய வனவிலங்கு ஆகும். உலக அளவில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அவற்றின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 அன்று சர்வதேச புலிகள் தினம் (International Tiger Day) கடைபிடிக்கப்படுகிறது.
முக்கியத்துவம்: சர்வதேச புலிகள் தினத்தன்று, புலிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அவற்றின் வாழ்விடத்தை பாதுகாத்தல் மற்றும் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. புலிகள் பரந்த பரப்பளவு கொண்ட காடுகளில் வாழும் தனித்து வாழும் விலங்குகள். இந்தியாவில் சுந்தரவனம், காசிமிரா நாகர் தேசிய பூங்கா, பந்திப்பூர், நாகர்ஹோலே போன்ற இடங்களில் அதிக அளவில் புலிகள் காணப்படுகின்றன. Paris Olympics 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024.. இந்திய வீரர்களின் இன்றைய போட்டி.. அடுத்த பதக்கம் யாருக்கு?!
பாதுகாப்பு நடவடிக்கைகள்: உலக அளவில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. உலகில் 9-க்கும் மேற்பட்ட புலி இனங்கள் இருந்தன. ஆனால், இப்போது பல இனங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. மீதமுள்ள இனங்களும் அழிவின் விளிம்பிலேயே உள்ளன. புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. காடுகளின் அழிவு, வேட்டையாடுதல், மனித-விலங்கு மோதல் போன்றவை முக்கிய காரணங்கள் ஆகும். புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவற்றின் வாழ்விடத்தை பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காடுகளை பாதுகாத்தல், புலிகளை வேட்டையாடுவதை தடுத்து நிறுத்துதல், மனித-விலங்கு மோதலைக் குறைத்தல் போன்றவை அவற்றில் முக்கியமானவை.
புலிகள் பற்றிய தகவல்கள்:
- புலி இந்தியாவின் தேசிய விலங்காகும். இது பூனை குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு.
- ஒவ்வொரு புலியும் தனியாகவே வாழும். ஒரு புலியின் எல்லைக்குள் மற்றொரு புலி நுழையாது.
- புலிகள் சிங்கங்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபடுமாம்.
- புலிகள் ஒரு நாளைக்கு 27 கிலோ கறியை உணவாக உட்கொள்ளும். ஆனால், பத்து புலிகளில் ஒன்று மட்டுமே வேட்டையில் வெற்றி பெறும். இதனால், நீண்ட நாட்கள் உணவு இல்லாமலும் இருக்க முடியும்.
- புலிகள் ஒரு நாளைக்கு 16 முதல் 20 மணி நேரம் வரை தூங்கும்.
புலிகள் சராசரியாக 10 முதல் 15 ஆண்டுகள் வரை வாழும்.