Aval Payasam Recipe: அட்டகாசமான சுவையில் அவல் பாயசம் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
சுவையாக அவல் பாயசம் ரெசிபி எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் காண்போம்.
ஜனவரி 31, சென்னை (Kitchen Tips): எப்போதும் போல ஒரே மாதிரியான பாயசம் செய்து சாப்பிடுவதைவிட, வித்தியாசமான முறையில் அதுவும் அவல் பயன்படுத்தி எப்படி சுவையாக பாயசம் செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். அவல் பாயசம் (Aval Payasam) மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
அவல் - 125 கிராம்
பால் - 750 மில்லி
சர்க்கரை - 125 கிராம்
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
உலர்ந்த திராட்சை (கிஸ்மிஸ்) - சிறிதளவு
முந்திரிப்பருப்பு - சிறிதளவு
நெய் - ஒரு டேபிள் ஸ்பூன் Agriculture Tips: மாவட்ட வாரியாக தென்னை நர்சரி தொடர்புகொள்ள.. வழிமுறைகள் என்ன?!
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து, நெய் விட்டு சூடானதும் முந்திரிப்பருப்பு, திராட்சையை சேர்த்து வறுத்துத் தனியாக ஒரு பவுலில் எடுத்து வைக்கவும். தீயைக் குறைத்து அதே வாணலியில் அவலைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அடுப்பில் அடிப்பகுதி கனமான பாத்திரத்தை வைத்து பால் சேர்த்துக் கொதிக்க விடவும். பால் கொதித்ததும், அடுப்பை சிம்மில் வைத்து, பால் அரை லிட்டராகும் வரை வற்ற விடவும். இதில் அவல் சேர்த்து நன்கு வேக விடவும். அவல் நன்கு வெந்ததும் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து பாயசம் பதம் வரும் வரை கெட்டியாக விடவும். பிறகு, முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.
(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 05:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

