Agriculture Tips: மாவட்ட வாரியாக தென்னை நர்சரி தொடர்புகொள்ள.. வழிமுறைகள் என்ன?!
வேளாண்மை உழவர் நலத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று, எளிய முறையில் கண்டறிந்து பயன்பெறலாம்.
ஜனவரி 31, சென்னை (Agri Tips): தமிழகத்தில் பெரும்பான்மையான விவசாயிகள், தென்னை விவசாயம் செய்து வந்தாலும், நல்ல தரமான தென்னை நாற்றுகள் கிடைப்பது சற்று அறிதாகவே உள்ளது. தற்போது விவசாயிகள், தென்னை பண்ணைகளை மாவட்ட வாரியாக கண்டறிய, வேளாண்மை உழவர் நலத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று, எளிய முறையில் கண்டறிந்து பயன்பெறலாம். Thaipusam 2025: தைப்பூசம் 2025 எப்போது? விரத முறைகள், வழிபாடுகள், சிறப்புக்கள் என்னென்ன? முழு விபரம் இதோ.!
இணையதளம்: https://www.tnagrisnet.tn.gov.in/
வழிமுறை:
அதிகாரப்பூர்வ இளையதளம் சென்று, முகப்பு பக்கத்தில் செய்திகள், முக்கிய இணைப்புகள், உழவன் செயலி போன்ற பிரிவிகள் காட்டும் அதன் கீழ் உள்கட்டமைப்பு என்ற பிரிவில் தென்னை நாற்றுப்பண்ணை என்னும் பிரிவு காட்டப்படும். அதனுள் தமிழகத்தில் மாவட்டவாரியாக இருக்கும் தென்னை நாற்று பண்ணைகளின் விவரங்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். அதில் நர்சரி பெயர், பொறுப்பாளரின் பெயர், தொலைபேசி எண் போன்ற விவரங்கல் இருக்கும். விவசாயிகள் தங்கள் மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து அந்த நர்சரிகளை தொடர்பு கொண்டு நாற்றுகளை வாங்கிக் கொள்ளலாம்.
(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 03:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

