ஏப்ரல் 29, சென்னை (Kitchen Tips): சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த மாதுளை பழத்தைக் கொண்டு எப்படி பாயாசம் (Pomegranate Payasam) செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

மாதுளை பழம் – 4

சர்க்கரை – 2 கப்

முந்திரி திராட்சை – 6 தேக்கரண்டி

கார்ன் ஃபிளவர் – 1 தேக்கரண்டி

நெய் – 6 தேக்கரண்டி

ஏலக்காய் – 6

உப்பு – சிறிதளவு. Minor Girl Sexual Harassment By Car Driver: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தலைமறைவாகியுள்ள ஓட்டுநருக்கு காவல்துறையினர் வலைவீச்சு..!

செய்முறை:

முதலில் மாதுளை பழத்தை (Mathulai Pazha Payasam) வெட்டி, அதில் உள்ள மாதுளை பற்களை மட்டும் தனியாக பிரித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்து, மிக்ஸியில் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை போட்டு, அதனுடன் ஏலக்காய் சேர்த்து அரைத்து ஏலக்காய் பொடி தயார் செய்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்பு, மாதுளை பற்களை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், ஒரு கடாயை அடுப்பில் வைத்து மாதுளை சாறை கொதிக்க விடவும். மேலும், சர்க்கரை சேர்த்து நன்கு உருகும் வரை வைக்கவும். பின், கார்ன் ஃபிளவர் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இதற்கிடையில், மற்றொரு கடாயில் நெய் சேர்த்து அதில் முந்திரி திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும். இதனோடு, ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பில் கொதிக்கும் பாயாசத்தில் கலந்து கிளறிவிடவும். அவ்வளவுதான் சுவையான மாதுளை பழ பாயாசம் ரெடி.