Ragi Laddu Recipe: தீபாவளி ஸ்பெஷல்! கேழ்வரகு லட்டு செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

தீபாவளியை முறுக்கு, மிக்சர், ஜாமூன், இவற்றுடன் மட்டுமே நிறுத்தி விடாமல் சிறு தானியத்தில் சில இனிப்பு வகைகளையும் செய்து இத்தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம்.

Ellu Laddu (Photo Credit: YouTube)

அக்டோபர் 28, சென்னை (Kitchen Tips): தீபாவளி வரப் போது ட்ரஸ் எடுத்தாச்சா, பட்டாசு வாங்கியாச்சா, என்ற கேள்வியுடன் இப்போது தீபாவளிக்கு என்ன என்ன இனிப்பு செய்யலாம் என்ற கேள்வியையும் சேர்த்துக்கொள்வோம். முன்பெல்லாம் தீபாவளி வந்து விட்டால் இரண்டு வாரத்திற்கு முன்பே பலகாராத்திற்கான முன்னேற்பாடுகள் செய்யத் தொடங்கி விடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் தீபாவளியன்று கடைக்கு சென்று இனிப்பு பெட்டி வாங்கி வந்து விடுகின்றனர். ஒரு சில வீடுகளில் மட்டுமே பலகாரங்கள் செய்கிறார்கள். இவ்வருட தீபாவளியை முறுக்கு, மிக்சர், ஜாமூன், இவற்றுடன் மட்டுமே நிறுத்தி விடாமல் சிறு தானியத்தில் சில இனிப்பு வகைகளையும் செய்து இத்தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம். இப்பதிவில் கேழ்வரகு லட்டு (Raagi Laddu) எப்படி செய்வது என்பதனை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு – 1 கப்

வெல்லம் – 3/4 கப்

ஏலக்காய் – 2

நல்லெண்ணெய் – சிறிதளவு Ragi Murukku Recipe: மொறுமொறுப்பான ராகி முறுக்கு செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

செய்முறை:

ஒரு கப் கேழ்வரகு மாவை ஒரு தேக்கரண்டி நெய் விட்டு மிதமான சூட்டில் 5 நிமிடத்திற்கு வறுத்தெடுத்துக் கொள்ளவேண்டும். அடுத்து அரை கப் தண்ணீர் ஊற்றி 150 கிராம் வெல்லத்தைக் காய்ச்சி எடுத்து ஆற வைக்க வேண்டும். பிறகு தேவைகேற்ப முந்திரியை நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இனி லட்டு பிடிக்க ஆரம்பிக்கலாம்.வறுத்தெடுத்த மாவில் சிறிது உப்பு, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி பருப்பு, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். பின் வெல்லப்பாகை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சப்பாத்தி மாவு போல் திரட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.பின் சிறு சிறு லட்டுக்களாக உருட்டி எடுத்து வைத்து பரிமாரலாம்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement