ஆகஸ்ட் 14, சென்னை (Chennai News): Krishna Jayanthi Wishes in Tamil Images & Krishna Janmashtami Wishes in Tamil WhatsApp Status Messages, HD Wallpapers, Quotes and SMS To Share on Gokulashtami:
பூவுலகில் நிலவி வந்த அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டி, எதிர்கால சந்ததிக்கு வாழ்வியல் போதனைகளை எடுத்துரைத்த விஷ்ணுவின் 8வது அவதாரமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நன்னாளை இந்து சமய மக்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளாக சிறப்பித்து வருகின்றனர். 2025ம் ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. பாதுகாப்பு, அன்பு, இரக்கம் என மக்களை காப்பாற்றி உலகத்தாருக்கு பல வாழ்வியல் உண்மைகளை எடுத்துரைத்த கிருஷ்ணரின் பிறந்தநாளை கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்ற பெயரிலும் மக்கள் சிறப்பித்து வருகின்றனர். கிருஷ்ணர் அருளிய பகவத் கீதை வாழ்வியல் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. 'எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ, அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன்' என்பது கிருஷ்ணரின் புகழ்பெற்ற வாக்குறுதியாகும். அதேபோல, 'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்' என்பதும் முக்கியமானது. அதர்மம் தனது பாதையில் தலைவிரித்து ஆடினாலும், இறுதியில் தர்மமே வெல்லும். அவனவன் செய்த பாவ-புண்ணியங்களை பொறுத்து தர்மம் தக்க சமயத்தில் காப்பாற்றும் என்பதும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அருளிய போதனைகளில் ஒன்றாகும். இந்த கிருஷ்ண ஜெயந்தி நாளில் உங்களது நண்பர்கள், குடும்பத்துடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தை வாழ்த்துச் செய்தியாக பகிரும் வகையில் லேட்டஸ்ட்லி உங்களுக்கு சிறந்த புகைப்பட தொகுப்புடன் வாழ்த்துக்களை பகிர்கிறது. இதனை நீங்கள் வாட்சப், பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களில் கிருஷ்ண ஜெயந்தி அன்று பகிர்ந்து உங்களின் கருத்துக்களையும் பகிரலாம். Krishna Jayanthi Special: கிருஷ்ணருக்கு பிடித்த திரட்டுப்பால், நெய் அப்பம், வெண்ணெய் உட்பட 8 ஸ்பெஷல் பலகாரங்கள்.. வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.!
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் 2025 (Krishna Jayanthi Wishes 2025):
1) எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன் - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

2) ஸ்ரீ கிருஷ்ணரின் ஆசி உங்கள் வீட்டில் அமைதி, செல்வ செழிப்புக்கு வழி வகுக்கட்டும்! இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

3) கிருஷ்ணர் உங்களை வழிநடத்தி, வாழ்க்கையின் வெற்றிக்கு உதவட்டும்! இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

4) எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்! - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

5) மகிழ்ச்சியுடனும், பக்தியுடனும் ஸ்ரீ கிருஷ்ண பகவானின் பிறந்தநாளை கொண்டாடுவோம்! இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

6) வாழ்வின் கவலைகளை நீக்கி, வீட்டில் மகிழ்ச்சியை நிரப்ப கிருஷ்ண பகவான் அருள் புரியட்டும்! இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

7) நீதியின் பாதையில் கிருஷ்ண பகவானுடன் பயணிப்போம்! இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

8) அன்பு, கருணை, மகிழ்ச்சி உங்களின் வாழ்க்கையை நிரப்பட்டும்! இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

9) புல்லாங்குழல் இசையின் மென்மையும், சக்கராயுதத்தின் உறுதியும் நம் வாழ்வில் கலந்திருக்கட்டும்… இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

10) ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ணா ஹரே ஹரே!
இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

11) கிருஷ்ண ஜெயந்தி நாளில் உங்களுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அருள் புரியட்டும்!

12) கிருஷ்ணனின் அருள் நீங்கள் நிலைத்த காரியத்தில் வெற்றியை கொடுக்கட்டும்! இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

13) உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, சந்தோசம் நிலைக்க பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வேண்டுகிறேன்! இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

14) எதிர்வரும் நாட்கள் இனிய நாட்களாக அமையட்டும்! இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

15) கோகுலத்தில் பிறந்த அந்த கோபாலனின் சிரிப்பு உங்கள் குடும்பத்துக்கு அருளாக கிடைக்கட்டும்! இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

16) நீல வண்ண கண்ணனின் சிரிப்பு உங்கள் இல்லத்தில் மலரட்டும்! இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

17) கண்ணனைப் போல அன்பு, கருணையுடன் வாழுங்கள்! இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

18) தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. இறுதியில் தர்மமே வெல்லும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

19) நல்லதை காக்கவும், தீயதை அழிக்கவும் நான் அவதரிப்பேன்! - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

20) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருள் என்றும் உங்களுடன் நிலைத்திருக்க, இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

21) கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே! - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

22) நந்தகோபாலன் உங்கள் வாழ்வில் என்றும் சிரிப்பு, சந்தோஷத்தை அருளட்டும்! இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்!

23) குறும்புக்கார கண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

24) கோகுலத்து கிருஷ்ணனின் புன்னகை உங்களின் வாழ்க்கையை இனிமையாக்கட்டும்! கிருஷ்ண ஜென்மாஷ்டமி நல்வாழ்த்துக்கள்!

25) Happy Krishna Jayanthi 2025

26) கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

கிருஷ்ண ஜெயந்தி நாளை சிறப்பித்து வாழ்வில் சகல செல்வங்கள் கிடைக்க லேட்டஸ்ட்லி தமிழ் வாழ்த்துகிறது.