Krishna Jayanthi Recipe (Photo Credit : @Imavemuthu / @NALLA__NANBAN X)

ஆகஸ்ட் 13, சென்னை (Chennai News): விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்தநாள் இந்தியாவில் கோகுலாஷ்டமி(Gokulashtami) , கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி (Krishna Janmashtami) என பல்வேறு பெயர்களில் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். வீட்டிலும் கிருஷ்ணரை மனமுருகி வழிபட்டால் அவரின் அருள் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு பிடித்த உணவுகளில் (Krishna Favourite Recipes) வெண்ணெய், திரட்டுப்பால், சீடை, ரிப்பன் முறுக்கு, ரவா லட்டு, அவல் லட்டு, நெய் அப்பம், அரிசி பாயாசம் உட்பட பலகாரங்களை செய்வது எப்படி? செய்ய தேவையான பொருட்கள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் ஒவ்வொன்றாக விரிவாக நாம் காணலாம்.

கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய் செய்வது எப்படி (Butter Recipe) :

  • வெண்ணெய் எடுக்க வேண்டிய நாளிலிருந்து 3 நாட்களுக்கு முன்பே காய்ச்சி ஆற வைத்த பாலில் சேரும் ஆடையை தனியாக எடுத்து பாத்திரத்தில் சேமித்துக் கொள்ளவும்.
  • பின் மிக்ஸி ஜாரில் குளிர்ந்த நீர் ஊற்றி எடுத்து வைத்த பாலாடையை அரைக்கவும். சிறிதளவு புளித்த தயிர் சேர்க்கலாம்.
  • பின் மீண்டும் அரைத்து வெண்ணெய் எடுத்துக் கொள்ளலாம்.

    Butter Recipe (Photo Credit : Pixabay)
    Butter Recipe (Photo Credit : Pixabay)
  • வெண்ணெய் தனியே தண்ணீர் தனியே பிரிந்து வெண்ணெய் கெட்டியாக மிதக்கும் போது கண்ணாடி பாத்திரத்தில் பந்து போல பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு முறை நீரில் அலசும் போது வெண்ணெய் திரண்டு வந்துவிடும்.
  • நெய் வேண்டும் என்ற பட்சத்தில் குறைந்த அளவுக்கு வெண்ணையை உருக்கி, நெய் எடுத்துக் கொள்ளலாம்.

கிருஷ்ணருக்கு பிடித்த திரட்டுப்பால் செய்ய தேவையான பொருட்கள் (Thirattupal Recipe) :

  • பால் - ஒரு லிட்டர்
  • வெல்லம் - 300 கிராம்
  • ஏலக்காய் - ஒரு ஸ்பூன்
  • நெய் - ஒரு ஸ்பூன்
  • முந்திரிப்பருப்பு - 10

    Thirattupal Recipe (Photo Credit : @jhansikitchen X)
    Thirattupal Recipe (Photo Credit : @jhansikitchen X)

    செய்முறை :

  • முதலில் பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். பின் பால் கெட்டியாக வரும்போது வெல்லம் சேர்த்து கிளற வேண்டும்.
  • மிதமான சூட்டில் இவற்றை திரட்டி நன்கு கலந்து நெய், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி நெய் தடவிய கிண்ணத்தில் பரிமாறினால் சுவையான திரட்டுப்பால் தயார்.

கிருஷ்ணருக்கு பிடித்த சீடை செய்ய தேவையான பொருட்கள் (Seedai Recipe) :

  • உளுந்து - 5 ஸ்பூன்
  • அரிசி மாவு - 1 ஸ்பூன்
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • எள் - 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
  • வெண்ணெய் - 3 ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை :

  • வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் வெறும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
  • பின் சூடு குறைந்ததும் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • அதே வாணலில் ஒரு கப் அரிசி மாவு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
  • இரண்டையும் அரைத்து அதனுடன் எள், சீரகம், தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூளை சேர்த்துக் கொள்ளவும்.
  • பின் வெண்ணெய் விட்டு மாவு பதத்துக்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிரிக்கவும்.
  • இறுதியாக தேங்காய் எண்ணெயில் வறுத்தால் சுவையான சீடை தயார்.

கிருஷ்ணருக்கு பிடித்த ரவா லட்டு செய்ய தேவையான பொருட்கள் (Rava Laddu Recipe) :

  • ரவை - இரண்டு டம்ளர்
  • சர்க்கரை - இரண்டரை டம்ளர்
  • நெய் - ஒரு ஸ்பூன்
  • முந்திரி பருப்பு - 10
  • ஏலக்காய் தூள் - சிறிதளவு

    Rava Laddu Recipe (Photo Credit: YouTube)
    Rava Laddu Recipe (Photo Credit: YouTube)

செய்முறை :

  • ரவையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். முந்திரிப் பருப்பையும் சிவக்க வறுக்கவும்.
  • பின் ரவை, சர்க்கரையை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் பொடித்த ஏலக்காய், முந்திரிப்பருப்பு சேர்த்து சூடான நெய் விட்டு பிசைந்து உருண்டையாக வைத்தால் சுவையான ரவா லட்டு தயார்.

கிருஷ்ணருக்கு பிடித்த ரிப்பன் முறுக்கு செய்ய தேவையான பொருட்கள் (Ribbon Murukku Recipe) :

  • பொட்டுக்கடலை - 1/2 கப்
  • அரிசி மாவு - 1 கப்
  • கடலை மாவு - 1/2 கப்
  • வெண்ணெய் - தேவைக்கேற்ப
  • சீரகம் - 1 சிட்டிகை
  • கடலெண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
  • உப்பு - 1 ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
  • பெருங்காயத்தூள் - சிறிதளவு

செய்முறை :

  • முதலில் எடுத்துக் கொண்ட பொட்டுக்கடலையை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • அதனுடன் அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கிளறி கொள்ளவும். பின் பெருங்காயத்தூள், சீரகம், வெண்ணெயை சேர்க்கவும்.
  • இறுதியாக சிறிது நீரூற்றி சப்பாத்தி மாவு போல பிசைந்து முறுக்கு அச்சு உதவியுடன் எண்ணெயில் சுட்டு எடுத்தால் சுவையான கிருஷ்ணருக்கு பிடித்த ரிப்பன் முறுக்கு தயார்.

    கிருஷ்ணருக்கு பிடித்த அவல் லட்டு செய்ய தேவையான பொருட்கள் (Aval Laddu Recipe) :

  • அவல் - மூன்று கப்
  • பொட்டுக்கடலை - ஒரு கப்
  • நெய் - ஒரு கப்
  • முந்திரி - தேவையான அளவு
  • சர்க்கரை - ஒரு கப்

செய்முறை :

  • வாணலியில் முதலில் அவல், பொட்டுக்கடலையை வறுத்து எடுத்துக் கொள்ளவும். முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் மிக்ஸியில் பொட்டுக்கடலை, சர்க்கரை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதுபோல அவலை தனியாக பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் அரைத்த பொருட்களில் ஏலக்காய், சேர்த்து லேசான சூடுள்ள நெய்யை ஊற்றி கிளறி இறக்கி, முந்திரி சேர்த்து உருண்டைகளாக பிடித்தால் அவல் லட்டு தயார்.

கிருஷ்ணருக்கு பிடித்த நெய் அப்பம் செய்ய தேவையான பொருட்கள் (Nei Appam Recipe) :

  • நெய் அப்பம்
  • பொடியாக்கிய வெல்லம் - முக்கால் கப்
  • தண்ணீர் அரை கப்
  • வாழைப்பழம் நறுக்கியது - இரண்டு
  • ஏலக்காய் - ஒன்று
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • அரிசி மாவு - ஒரு கப்
  • நெய் - தேவையான அளவு

    Nei Appam Recipe (Photo Credit : @KalkiOnline X)
    Nei Appam Recipe (Photo Credit : @KalkiOnline X)

செய்முறை :

  • பொடியாக்கிய வெல்லத்தை பாத்திரத்தில் சேர்த்து மிதமான தீயில் கரைத்து இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • மிக்ஸியில் வாழைப்பழம், குளிர வைத்த வெல்லம் சேர்த்து ஏலக்காய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு கப் அரிசி மாவில் அரைத்த விழுதை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவை இரண்டு மணி நேரம் ஊற வேண்டும்.
  • பணியாரப்பதம் வந்ததும் பணியார கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் நெய் சேர்த்து, மாவை ஊற்றி வேக வைத்து நன்கு பொன்னிறமானதும் எடுத்தால் சுவையான நெய் அப்பம் தயார்.

கிருஷ்ணருக்கு பிடித்த சுவையான அரிசி பாயாசம் செய்ய தேவையான பொருட்கள் (Arisi Payasam Recipe) :

  • நெய் - அரை ஸ்பூன்
  • அரிசி - 3 கரண்டி
  • பால் - 2 லிட்டர்
  • சர்க்கரை - ஒரு கப்

    Arisi Payasam Recipe (Photo Credit : @praveenaskitcen X)
    Arisi Payasam Recipe (Photo Credit : @praveenaskitcen X)

செய்முறை :

  • முதலில் அரிசியை கழுவி காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • கடாயில் நெய் விட்டு அரிசியை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  • பின் பால் ஊற்றி அரிசியை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பால் சுண்டி அரிசி வெந்த பதத்திற்கு வந்ததும் சர்க்கரை, திராட்சை, முந்திரி சேர்த்தால் சுவையான பாயாசம் தயார்.