Mango Rasam Recipe: கமகம சமையல்.. சுவையான மாங்காய் ரசம் செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் இதோ.!

எப்போதும் ஒரே மாதிரியான ரசம் வைத்து சலித்துவிட்டது என நினைப்போர், சீசனுக்கு ஏற்றபடி மாங்காய் ரசம் செய்வது (Mango Rasam Recipes in Tamil) எப்படி என இன்று தெரிந்துகொள்ளுங்கள்.

Mango Rasam Recipe: கமகம சமையல்.. சுவையான மாங்காய் ரசம் செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் இதோ.!
Mango Rasam (Photo Credit: YouTube)

ஏப்ரல் 25, திட்டக்குடி (Tamil Cooking Tips News): கோடைகாலம் தொடங்கிவிட்டால் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நினைவுக்கு வருவதுபோல வெள்ளரி, மாங்காய் சீஸனும் நினைவில் உதிக்கும். மாங்காயில் சுவையான ஊறுகாய் உட்பட பல விஷயங்களை நீங்கள் செய்து சாப்பிட்டு இருக்கலாம். இன்று ஒரு மாறுதலுக்கு சுவையான மாங்காய் ரசம் செய்வது எப்படி (Mango Rasam Seivathu Eppadi) என தெரிந்துகொள்ளுங்கள். Bottle Gourd Juice: தினசரி காலையில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..? விவரம் உள்ளே..! 

செய்யத்தேவையான பொருட்கள்:

மாங்காய் - 2,

பச்சை மிளகாய் - 4,

நல்லெண்ணெய் - சிறிதளவு,

தண்ணீர் - முக்கால் டம்ப்ளர்,

தாளிக்க:

நல்லெண்ணெய் - 4 கரண்டி,

காய்ந்த மிளகாய் - 5,

கடுகு உளுந்து - 2 கரண்டி,

கறிவேப்பில்லை & கொத்தமல்லி - சிறிதளவு,

சின்ன வெங்காயம் - 75 கிராம்,

சீரகம் - கால் கரண்டி,

மஞ்சள் தூள் - கால் கரண்டி,

பெருங்காயத்தூள் - அரைக்கரண்டி,

உப்பு - உங்களின் தேவைக்கேற்ப,

நாட்டு சர்க்கரை - அரை கரண்டி,

மாங்காய் ரசம் செய்முறை (Mango Rasam Seimurai):

முதலில் எடுத்துக்கொண்ட மாங்காய், பச்சை மிளகாயில் தனித்தனியே எண்ணெய் தடவி தீயில் சுட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.

மாங்காயில் தோலை நீக்கி கிண்ணத்தில் சதையை எடுத்து வைத்துக்கொள்ளவும். மிக்சியில் மாங்காய், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அல்லது மசித்து வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், கடுகு, கறிவேப்பில்லை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் பொடிய நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி சீரகம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும்.

இறுதியாக அரைத்துள்ள மாங்காய் விழுது, உப்பு, நீர் சேர்த்து கிளறிவிடவும். ஒரு கொதி வந்ததும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து மல்லித்தழைகள் தூவி இறக்கினால் சுவையான மாங்காய் ரசம் தயார்.

(The above story first appeared on LatestLY on Apr 25, 2025 09:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).