IPL Auction 2025 Live

Benefits Of Sugarcane Juice: கரும்புச் சாறில் உள்ள பலன்கள் என்னென்ன..? - விவரம் உள்ளே..!

Sugarcane Juice (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 16, சென்னை (Health Tips): கரும்புச்சாறு நாம் உடலுக்கு உடனடியாக ஆற்றலை அளிக்கக்கூடிய சிறந்த பானமாகும். இது வைரஸ் மற்றும் பாக்டீரியா (Viruses And Bacteria) நோய்த்தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும், தொடையில் எரிச்சல் ஏற்பட்டால் உடனடியாக கரும்புச் சாற்றை தொடர்ந்து பருகி வந்தால், இந்த பிரச்சனை தீர்ந்து விடும். நம் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கிறது. இதனால், இதயம் மற்றும் நுரையீரலுக்கு வலுசேர்த்து, வயிற்று புண்களை சரிசெய்து மலச்சிக்கலை தடுக்கிறது. Minor Girl Kidnapped And Raped: 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்..!

கரும்புச் சாறை தொடர்ந்து பருகி வந்தால், பற்கள் வலிமை பெறுகிறது. பற்களின் ஈறுகள் சம்மந்தமான பிரச்சனைகள் சரிசெய்யப்படுகிறது. இதோடு தயிர் சேர்த்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் எரிச்சல்களை சரி செய்யலாம். இது உடல் சூட்டை தணிக்கிறது. கரும்புச் சாற்றை தினமும் பருகி வருவதால் மூளையின் செயல்பாடு அதிகரித்து, சுறுசுறுப்பாக இருக்க இது உதவுகிறது. மேலும், கல்லீரல் நன்கு செயல்படவும் கரும்புச் சாறு பயனளிக்கிறது. கரும்புச் சாறில் உள்ள பொட்டாசியம் வயிற்றில் ஏற்படக்கூடிய செரிமான கோளாறுகளை சரிசெய்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.

இதிலுள்ள பாலிஃபீனால் என்ற இயற்கையான வேதிப்பொருள் ரத்த தட்டணுக்கள் இணைந்து நிகழக்கூடிய ரத்த உறவை தடுத்து, ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. சிறுநீரக கோளாறு பிரச்சனைகளையும் சரிசெய்கிறது. விட்டமின் சி அதிகமாக உள்ளதால் வயிற்றுப்புண் மற்றும் தொண்டைப்புண் குணமாகிறது. கரும்புச் சாறு தாகத்தை தணிப்பது மட்டுமில்லாமல், உடலுக்கு புத்துணர்ச்சியையும் அளிக்கிறது.