ஏப்ரல் 16, புதுக்கோட்டை (Pudukottai News): புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூரை சேர்ந்த 17 வயது சிறுமி காணவில்லை என சிறுமியின் தந்தை கீரனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். Young Woman Sexual Harassment: இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு; மெட்ரோ ரயில் நிலையத்தில் மர்ம நபர் அத்துமீறல்..!
இதுகுறித்த விசாரணையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குட்டத்து ஆவாரம்பட்டி பகுதியை சேர்ந்த ஜக்குலின் ராபர்ட் ஸ்டீபன் என்பவருடைய மகன் லாரன்ஸ் (வயது 19) என்ற இளைஞர் சிறுமியை கடத்தி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, காவல்துறையினர் இருவரையும் மீட்டு கீரனூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இவர்களை ஒப்படைத்துள்ளனர். இவர்களிடம் காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இதில், இவர்கள் இருவருக்கும் சமூக வலைதளம் (Social Networking Site)மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி, அவரை கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறையினர் லாரன்ஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சிறுமியை திருமணம் செய்ததற்கு குழந்தைகள் பாதுகாப்பு நல வாரியம் புகார் அளித்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.