ஏப்ரல் 10, சென்னை (Beauty Tips): அன்னாசிப்பழம் நம் உடலுக்கு சத்துகளை வழங்குவது போன்று, சரும பாதுகாப்புக்கும் பயனளிக்கிறது. அன்னாசிப்பழத்தில் (Pineapple Fruit) நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்துள்ளது. முகம் சுருக்கம் நீங்க, அன்னாசிபழச் சாறுடன் 2 தேக்கரண்டி தேங்காய்பாலை கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் முகத்தில் பூசி வர வேண்டும். மேலும், 2 தேக்கரண்டி தேங்காய் பால், வெந்தய பொடி அதோடு அன்னாசிப்பழ விழுது அரை கப் சேர்த்து தலையில் தேய்த்து வந்தால், கூந்தல் வளர்ச்சி அடையும். Israle Direct Attack On Iran: ஈரான் மீது தக்க பதிலடி தாக்குதல் கொடுப்போம்; இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை..!

வாரத்திற்கு 2 நாள் ஒரு தேக்கரண்டி கடலை மாவு மற்றும் ஒரு தேக்கரண்டி அன்னாசிப்பழ சாறு கலந்து முகத்தில் பூசி, 5 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி, முகம் பொலிவு பெற செய்யும். மேலும் முட்டையின் வெள்ளைக்கரு, 1 தேக்கரண்டி தேன் இதோடு இரண்டு துண்டுகள் அன்னாசிப்பழம் கலந்து கழுத்து பகுதியில் தேய்த்து. 10 நிமிடங்கள் கழித்து கழுவி பார்த்தால், கழுத்து சுருக்கங்கள் நீங்கும்.

அன்னாசிப்பழச்சாறு, பீட்ரூட் சாறு இரண்டிலும் தலா 1 தேக்கரண்டி எடுத்துக்கொண்டு, இதில் 5 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு தேவைப்படும் நேரத்தில் உதடுகளில் தேய்த்து வந்தால், வறண்ட போன உதடுகள் ஈரப்பதம் பெற்று அதில் உள்ள வெடிப்புகள் மறைந்து பளபளபாக்கும்.