ஏப்ரல் 10, ஜெருசலேம் (World News): இஸ்ரேல்-ஈரான் (Israel-Iran War)இடையே கடந்த சில ஆண்டுகளாக நிழல் யுத்தம் நடைபெற்று வருகிறது. தற்போது, இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு, ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது. மேலும், ஏமன் நாட்டின் கவுதி கிளர்ச்சி குழு, ஈரான் ஆதரவு கிளர்ச்சி குழுவும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகின்றன. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. Husband Killed By Wife: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி; கள்ளத்தொடர்பை கைவிட சொன்னதால் ஆத்திரம்..!

இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில், சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் துணை தூதரகம் கடந்த 1-ஆம் தேதி தாக்கப்பட்டு, அதில், 2 முக்கிய ராணுவ தளபதிகள் உட்பட 7 பேர், சிரியாவை சேர்ந்த 4 பேர் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த 1 என மொத்தம் 12 பேர் பலியாகியுள்ளனர். ஈரான் தூதரகம் மீதான இந்த தாக்குதலுக்கு, ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி இன்றைய தினம், இஸ்ரேல் மீது தக்க பதிலடி தாக்குதல் கொடுப்போம் என அறிவித்தார். மேலும், மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இஸ்ரேல் நாட்டை எதிர்த்து குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர்கள் எந்த வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து, இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி இஸ்ரேல் கட்ஸ் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளதில், 'ஈரான் தனது நாட்டின் பகுதிகளை குறிவைத்து தாக்கினால், அதற்கு தக்க பதிலடி தாக்குதல் கொடுப்பதுடன், ஈரானை நேரடியாக தாக்குதல் நடத்துவோம்' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.