Pineapple Beauty Tips: அன்னாசிப்பழத்தில் உள்ள அழகு குறிப்புகள் என்னென்ன..? - விவரம் உள்ளே..!

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த அன்னாசிப்பழத்தில் உள்ள அழகு குறிப்புகள் என்னென்ன உள்ளன என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

Pine Apple (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 10, சென்னை (Beauty Tips): அன்னாசிப்பழம் நம் உடலுக்கு சத்துகளை வழங்குவது போன்று, சரும பாதுகாப்புக்கும் பயனளிக்கிறது. அன்னாசிப்பழத்தில் (Pineapple Fruit) நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்துள்ளது. முகம் சுருக்கம் நீங்க, அன்னாசிபழச் சாறுடன் 2 தேக்கரண்டி தேங்காய்பாலை கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் முகத்தில் பூசி வர வேண்டும். மேலும், 2 தேக்கரண்டி தேங்காய் பால், வெந்தய பொடி அதோடு அன்னாசிப்பழ விழுது அரை கப் சேர்த்து தலையில் தேய்த்து வந்தால், கூந்தல் வளர்ச்சி அடையும். Israle Direct Attack On Iran: ஈரான் மீது தக்க பதிலடி தாக்குதல் கொடுப்போம்; இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை..!

வாரத்திற்கு 2 நாள் ஒரு தேக்கரண்டி கடலை மாவு மற்றும் ஒரு தேக்கரண்டி அன்னாசிப்பழ சாறு கலந்து முகத்தில் பூசி, 5 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி, முகம் பொலிவு பெற செய்யும். மேலும் முட்டையின் வெள்ளைக்கரு, 1 தேக்கரண்டி தேன் இதோடு இரண்டு துண்டுகள் அன்னாசிப்பழம் கலந்து கழுத்து பகுதியில் தேய்த்து. 10 நிமிடங்கள் கழித்து கழுவி பார்த்தால், கழுத்து சுருக்கங்கள் நீங்கும்.

அன்னாசிப்பழச்சாறு, பீட்ரூட் சாறு இரண்டிலும் தலா 1 தேக்கரண்டி எடுத்துக்கொண்டு, இதில் 5 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு தேவைப்படும் நேரத்தில் உதடுகளில் தேய்த்து வந்தால், வறண்ட போன உதடுகள் ஈரப்பதம் பெற்று அதில் உள்ள வெடிப்புகள் மறைந்து பளபளபாக்கும்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement