Nervousness (Photo Credit: Pixabay)

மே 07, ஆரோக்கியம் (Health Tips): நமது உடலும், மனமும் தனித்தனியே பிரிக்க இயலாதது. நமது உடலில் ஏற்படும் சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்த பிரச்சனைகளுக்கு மனப்பதற்றம் கூட காரணமாக இருக்கலாம்.

மனபதற்றத்தை தணிக்க நாம் வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். நமது உடல் எடை அதிகளவு இருக்கும் பட்சத்தில், அதனை பாதியளவு குறைத்தாலே பல்வேறு பிரச்சனைகள் சரியாகிவிடும். TTV Dhinakaran: “மக்கள் துயரத்தின் தொடர்ச்சியே திமுகவின் ஆட்சி” – டிடிவி தினகரன் காரசார விமர்சனம்.!

நாம் தவறாமல் உடற்பயிற்சி செய்யும் பட்சத்தில், மனப்பதற்றம் மற்றும் மனசோர்வு போன்றவை வெகுவாக குறையும். ஆரோக்கியத்துடன் இருக்கும் உறுதியான உடல் பதற்றம் இல்லாத மனதுக்கு ஆதாரம் ஆகும்.

நாம் யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளும் பட்சத்தில் நல்ல பலன் கிடைக்கும். டீ, காபி போன்றவை குடிப்பது மனபதற்றத்தை அதிகரிக்கும். காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். அதுவே மனபதற்றத்தை கட்டுப்படுத்தும். எந்த ஒரு விஷயத்தை எண்ணியும் பதற்றம் கூடாது.