Masala Sundal Recipe: ஆயுத பூஜைக்கு சுவையான மசாலா சுண்டல் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் மசாலா சுண்டல் சுவையாக எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Masala Sundal Recipe: ஆயுத பூஜைக்கு சுவையான மசாலா சுண்டல் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
Masala Sundal (Photo Credit: YouTube)

அக்டோபர் 10, சென்னை (Kitchen Tips): ஆயுத பூஜை (Ayudha Puja) தினத்தை முன்னிட்டு படையலில் பொறி, வேர்க்கடலை மற்றும் சுண்டல் ஆகிய மூன்று உணவுப் பொருட்கள் இடம்பெறும். அனைவரது வீட்டிலும் வெள்ளை கொண்டைக்கடலை அல்லது கருப்பு கொண்டைக்கடலை பயன்படுத்தி சுண்டல் தயாரித்து கடவுளுக்கு படைப்பர். எந்த சுண்டலாக இருந்தாலும் அதை தாளிப்பதோடு மட்டுமின்றி மசாலா பொருட்கள் சேர்த்து மசாலா சுண்டலாக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த மசாலா சுண்டல் புரதம், நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கிய உணவாகும். உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் மசாலா சுண்டல் சாப்பிடலாம். அப்படிப்பட்ட மசாலா சுண்டல் (Masala Sundal) சுவையாக எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். Sundaikai Kuzhambu Recipe: கிராமத்து சுவையில் சுண்டைக்காய் குழம்பு செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

கருப்பு கொண்டைக்கடலை - அரை கிலோ

தேங்காய் துருவல் - கால் கப்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி

இஞ்சி - 10 கிராம்

பூண்டு - 5 பல்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

கடுகு - 1 கரண்டி

கரம் மசாலா - 1 கரண்டி

மஞ்சள் தூள் - கால் கரண்டி

சோம்பு - 1 கரண்டி

பட்டை - 3

பெருங்காயம் - சிறிதளவு

பச்சை மிளகாய் - 3. Ayudha Puja 2024: ஆயுத பூஜை 2024; நல்ல நேரம், வழிபாட்டு முறைகள் குறித்த முழு விவரம் உள்ளே..!

செய்முறை:

  • முதலில் கருப்பு கொண்டைக்கடலையை தண்ணீரில் குறைந்தது 8 மணி நேரம் ஊறவைக்கவும். பின் குக்கரில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி கொண்டைக்கடலையை போட்டு கொஞ்சமாக உப்பு சேர்த்து வேக விடவும். மூன்று விசில் அடித்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.
  • அடுத்து தண்ணீரை வடிகட்டி சுண்டலை தனியாக எடுத்து வைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • அடுத்ததாக பொடிதாக நறுக்கிய ஒரு வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் பட்டை, சோம்பு, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டை இடித்து கடாயில் போட வேண்டும்.
  • இதன் பிறகு ஒரு தக்காளியை நறுக்கி சேர்க்கவும். தக்காளி எண்ணெய்யை உறிஞ்சி சுருங்கி வதங்கி பச்சை வாடை போன பிறகு மசாலா பொருட்கள் சேர்க்கவும்.
  • பிறகு கரம் மசாலா மற்றும் மஞ்சள் தூள், கொஞ்சமாக பெருங்காயம் போடவும். ஏற்கெனவே சுண்டலை வேக வைக்கும் போது உப்பு போட்டதால், தற்போது தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
  • இறுதியாக அதன்மேல் தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறிவிடவும். அவ்வளவுதான் சுவையான மசாலா சுண்டல் ரெடி.

(The above story first appeared on LatestLY on Oct 10, 2024 06:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).