Sundaikai Kuzhambu (Photo Credit: YouTube)

அக்டோபர் 10, சென்னை (Kitchen Tips): தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று சுண்டைக்காய் குழம்பு (Sundaikai Kuzhambu). சுண்டைக்காயில் (Turkey Berry) நிறைய நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. சுண்டைக்காய் (Sundaikai) குழம்பு வெறும் சாதத்துடன் மட்டுமல்லாமல் இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் சூப்பராக இருக்கும். இந்தக் குழம்பு பலவிதமான மசாலா பொருட்கள் மற்றும் புளி சேர்த்து தயாரிக்கப்படுவதால், மிகவும் சுவையாக இருக்கும். சுண்டைக்காய் குழம்பு செய்வதற்கு பல விதமான முறைகள் உள்ளன. ஆனால், மிகவும் சுவையாக சுண்டைக்காய் குழம்பு எப்படி செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். Beetroot Rice Recipe: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் பீட்ரூட் சாதம் செய்வது எப்படி..?

தேவையான பொருட்கள்:

சுண்டைக்காய் - 250 கிராம் (நறுக்கியது)

வெங்காயம் - 2 (நறுக்கியது)

தக்காளி - 2 (நறுக்கியது)

புளி - ஒரு எலுமிச்சை அளவு

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

கொத்தமல்லித் தூள் - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

உளுந்து - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் புளியை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் நன்றாகப் பிழிந்து புளிச்சாறு எடுத்துக் கொள்ளவும். பின், ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுந்து, கருவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
  • அடுத்து வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து வதக்கவும். மசாலாவில் சுண்டைக்காய் சேர்த்து நன்றாகக் கிளறவும். பின்னர், புளிச்சாறு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
  • குழம்பு கொதித்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து, கொஞ்சமாக சுண்டி வரும் வரை கொதிக்க வைக்கவும். இறுதியில், குழம்பு நன்றாக கொதித்து சுண்டைக்காய் வெந்த பிறகு, கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால், சுவையான சுண்டைக்காய் குழம்பு ரெடி.