Carrot Chutney (Photo Credit: Pixabay | YouTube)

நவம்பர் 07, சென்னை (Kitchen Tips): நம் வீடுகளில் பெரும்பாலும் காலை, இரவு நேரங்களில் தோசை, இட்லி செய்து சாப்பிடுவோம். அதற்கு எப்பவும் போல தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் என ஏதாவது ஒரு ரெசிபி செய்வோம். ஆனால், எப்போதும் ஒரே மாதிரியாக சாப்பிடுவதற்கு பதிலாக கேரட் (Carrot) சட்னி செய்து சாப்பிடலாம். கேரட் சட்னி சுவையாகவும் சற்று காரமாகவும் இட்லி, தோசைக்கு ஏற்றார் போல மிக அருமையான சுவையில் இருக்கும். கேரட் சட்னி (Carrot Chutney) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:

கேரட் - 1 (பெரியது)

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 1

காய்ந்த மிளகாய் - 2

இஞ்சி - ஒரு சிறிய துண்டு. Murungai Keerai Sadam Recipe: மணமும் சுவையும் நிறைந்த முருங்கைக்கீரை சாதம் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

தாளிக்க தேவையானவை:

உளுத்தம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

கடுகு, கருவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

  • முதலில் கேரட்டை பொடியாக துருவிக் கொள்ளவும். பின், வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அடுத்து, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, இஞ்சி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  • அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். வெங்காயம், தக்காளி வதங்கிய பிறகு, துருவி வைத்துள்ள கேரட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி பின்னர், இதனை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்க வேண்டும்.
  • இதனையடுத்து, ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து இதில் சேர்க்கவும். அவ்வளவுதான் சுவையான கேரட் சட்னி ரெடி.