நவம்பர் 06, சென்னை (Kitchen Tips): வீட்டில் மதிய வேளையில் தினமும் சாம்பார், ரசம், புளிக்குழம்பு என்று செய்வதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக முருங்கைக் கீரை வைத்து முருங்கைக் கீரை சாதம் (Murungai Keerai Sadam) செய்து சாப்பிடலாம். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாகவும் மணமாகவும் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை - 2 கைப்பிடி அளவு
அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - அரை கப்
பாசிப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
வெந்தயம் - 10
வரமிளகாய் - 2
பூண்டு - 5 பல்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு. Pasiparuppu Pakoda Recipe: சத்தான பாசிப்பருப்பு பக்கோடா செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
செய்முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி, துவரம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து நீரில் 2-3 முறை கழுவி, பின் நீரை ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.
- பின் அதில் வரமிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் பூண்டு பற்களை தட்டிப் போட்டு வதக்க வேண்டும்.
- அதன்பின், அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி பின்பு அதில் 5 1/2 கப் நீரை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள், சாம்பார் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், 2 கைப்பிடி முருங்கைக்கீரையை சேர்த்து கிளறி, கழுவி ஊற வைத்துள்ள அரிசியை நீரை வடித்துவிட்டு சேர்த்து கிளறி, உப்பு சுவை பார்த்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு, பின் குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
- விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் நெய் ஊற்றி நன்கு கிளறினால், அவ்வளவுதான் சுவையான முருங்கைக் கீரை சாதம் ரெடி.