ஏப்ரல் 08, சென்னை (Kitchen Tips): சுவையான முந்திரி கேக்கை வெறும் அரை மணி நேரத்தில் எப்படி செய்து சாப்பிடுவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முந்திரி - 300 கிராம்
நெய் - 300 மில்லி
தண்ணீர் - 150 மில்லி
சர்க்கரை - 600 கிராம். Landslide On The National Highway: தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பாறைகள் விழுந்து போக்குவரத்து தடை – 10 மணிநேரம் கடுமையான பாதிப்பு..!
செய்முறை:
முதலில், சுடுநீரில் அரை மணி நேரம் முந்திரியை ஊறவைத்து கழுவவும். பிறகு, சற்று கரகரப்பாக நீர் சேர்த்து அரைத்து கனமான பாத்திரத்தில் போட்டு சர்க்கரையை சேர்த்து கலந்துவிடவும். நன்கு கிளறிவிட்டு, நெருப்பை லேசாக வைத்துக்கொண்டு அடிபிடிக்காதவாறு நன்கு கிளறிவிட வேண்டும். சிறிது நேரம் கழித்து பாத்திரத்தின் ஓரத்தில் வெண்மையாக ஒட்டி வரும்போது, பாத்திரத்தை கீழே இறக்கி வைத்து நெய்யை ஊற்றி நன்கு கிளறவும். பின்னர், முழுமையாக ஊற்றி கிளறிவிட்டு, நெய் தடவிய தட்டில் இதனைக் கொட்டி சமமாக பரப்பிவிட்டு, தேவையான அளவில் வெட்டிக்கொள்ள வேண்டும். சுவையான முந்திரி கேக் ரெடி.