ஏப்ரல் 08, ஜம்மு-காஷ்மீர் (Jammu-Kashmir News): ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரம்பன் மாவட்டம், ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் கூனி நாலா பகுதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பெரும் பாறைகள் உருண்டு வந்து சாலைகளில் விழுந்துள்ளதால், போக்குவரத்து தடையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highway Authority) NHA 144-ல் உள்ள சாலைகளில் பாறைகளை அப்புறப்படுத்தும் பணி சுமார் 12 மணிநேரத்திற்கும் மேலாக நடந்துகொண்டிருக்கிறது. Wife And Daughters Suicide Attempt: மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்த கணவர்; மனைவி, மகள்கள் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி..!

மேலும், இந்த பாதையை இனிமேல் பயணிகள் தவிர்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மார்ச் 31-ஆம் தேதி அன்று, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 44, கிஷ்த்வார் பதேர் மற்றும் மேஹத் தல்வாஸ் ஆகிய இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.