Chettinad Mushroom Masala Recipe: மட்டன் குருமாவை மிஞ்சும் சுவையில் செட்டிநாடு காளான் மசாலா செய்வது எப்படி..?
சப்பாத்திக்கு சிறந்த சைடிஷ் ஆக செட்டிநாடு காளான் மசாலா எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
நவம்பர் 13, சென்னை (Kitchen Tips): தமிழ்நாட்டில் உணவுகள் என்றாலே முதலில் செட்டிநாடு உணவுகள்தான் நினைவில் வரும். அதனால்தான், உலகம் முழுவதும் செட்டிநாடு உணவுகள் பிரபலமாக உள்ளது. செட்டிநாடு உணவுகள் என்றாலே சுவையானதாக இருக்கும் என்று மக்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது. அந்த வகையில், காளான் (Mushroom) வைத்து மட்டன் குருமாவை மிஞ்சும் சுவையில் செட்டிநாடு ஸ்டைல் காளான் மசாலா (Chettinad Mushroom Masala) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இது சப்பாத்தி மற்றும் சாதத்துக்கு சிறந்த சைடிஷாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
காளான் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
சீரகம் - அரை கரண்டி
எண்ணெய் - 50 மில்லி
கொத்தமல்லி - சிறிதளவு. Veg Gravy Recipe: ஆரோக்கியம் நிறைந்த சத்தான வெஜ் கிரேவி செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
அரைக்க தேவையானவை:
தேங்காய் துருவல் - 3 கரண்டி
காய்ந்த மிளகாய் - 12
மல்லித்தூள் - 2 கரண்டி
சீரகம், சோம்பு - தலா 1 கரண்டி
மிளகு, கசகசா - தலா 1 கரண்டி
ஏலக்காய், அன்னாசிப்பூ - தலா 2
பட்டை, கிராம்பு - தலா 2
வதக்கி அரைக்க தேவையானவை:
சின்ன வெங்காயம் - 1 கப்
தக்காளி - 3
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5 பல்
செய்முறை:
- முதலில் தேங்காய்த் துருவலை கடாயில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அதன்பின், அரை கரண்டி எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, ஆறிய பின்னர் தண்ணீர் சேர்த்து மசிய அரைக்க வேண்டும்.
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கி ஆற வைத்து அரைக்கவும். பின்னர், கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், வெங்காயம் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அரைத்த வெங்காய விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- இதன் மசாலா வாசனை போனதும் அரைத்த மசாலாவை சேர்க்கவும். இந்நிலையில், தேவையான அளவு உப்பு சேர்த்து, மசாலா நன்கு கொதித்ததும் நறுக்கிய காளானை சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி கொதிக்க விட வேண்டும்.
- நறுக்கிய காளான் நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது, கொத்தமல்லி தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு காளான் மசாலா ரெடி.
(The above story first appeared on LatestLY on Nov 13, 2024 06:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

