Veg Gravy (Photo Credit: YouTube)

நவம்பர் 12, சென்னை (Kitchen Tips): எப்போதும் ஒரே மாதிரியான ஸ்டைலில் கிரேவி செய்யாமல், சற்று வித்தியாசமாக வெஜிடபிள் வைத்து சுவையான முறையில் சத்தான வெஜ் கிரேவி எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். நான்வெஜ் சுவையை மிஞ்சும் வகையில் வெஜ் கிரேவி (Veg Gravy) எப்படி செய்வது என்பதை இதில் தெரிந்து கொள்வோம். Appala Kuzhambu Recipe: அசத்தலான சுவையில் அப்பளக் குழம்பு செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

கேரட் - 1

தேங்காய்த்துருவல் - அரை கப்

பச்சை பட்டாணி - கால் கப்

பீன்ஸ் - 15

உருளைக்கிழங்கு - 2

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 3

மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி

பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

முந்திரி பருப்பு - 8

கிராம்பு - 4

ஏலக்காய் - 3

பட்டை - 2

நட்சத்திர பூ - 1

சீரகத்தூள் - 1 கரண்டி

கரம் மசாலாத்தூள் - 1 கரண்டி

தண்ணீர் - 2 கப்

கடலை எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

கொத்தமல்லி தழை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் ஒரு கடாயில் கடலை எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு, நட்சத்திர பூ, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். பிறகு நீளமாக இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
  • இப்போது பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். பொடியாக அறிந்த கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து மிதமான சூட்டில் 2 நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து விட்டு பிறகு மஞ்சள்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். மசாலாக்களின் பச்சை வாடை போக மிதமான தீயில் 2 நிமிடம் நன்கு வதக்கி விடவும். இப்போது, பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மீண்டும் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து காய்கறி வேகும் அளவிற்கு உப்பு சேர்த்து, மூடி போட்டு சுமார் 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக விடவும். பின் திறந்து பார்க்கும் பொழுது காய் நன்கு வெந்து இருக்கும். அப்போது, அரை கப் அளவு தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சோம்பு, பொட்டுக்கடலை, முந்திரி பருப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு நைஸாக அரைத்து காயுடன் சேர்க்கவும்.
  • இப்போது தேங்காய் விழுதுடன் மீண்டும் அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பை அதிக தீயில் வைத்து, கிரேவிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் 5 நிமிடம் அடுப்பில் வைக்கவும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைக்கவும். அவ்வளவுதான் சுவையான சத்தான வெஜ் கிரேவி ரெடி.