ஏப்ரல் 05, சென்னை (Kitchen Tips): உடலுக்கு குளிர்ச்சி அளிக்க கூடிய வெள்ளரிக்காயை வைத்து எப்படி சப்பாத்தி செய்து சாப்பிடுவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் - 2

கோதுமை மாவு - 2 கப்

எண்ணெய் - தேவையான அளவு

பச்சை மிளகாய் - 5

கொத்தமல்லி இலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு. Woman Raped And Killed: குடிபோதையில் வாலிபர் கொடூரம்; 55 வயது பெண் கற்பழித்து கொலை..!

செய்முறை:

முதலில், வெள்ளரிக்காயை தோல் சீவி துருவி வைத்துக்கொள்ளவும். பின், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லித்தழை ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர், ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் கோதுமை மாவு, துருவி வைத்த வெள்ளரிக்காய் மற்றும் நறுக்கி வைத்த கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் சேர்த்து அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். அடுத்து, தண்ணீர் போதுமான அளவு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் சிறிது நேரம் ஊற வைக்கவேண்டும். பின்னர், தோசை கல்லை அடுப்பில் வைத்து, அதில் இதை தேய்த்து சப்பாத்தி போன்று, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இரு பக்கமும் வேகவைத்து எடுக்கவும். பின், சுவையான வெள்ளரிக்காய் ரொட்டி தயார். இதோடு அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு சட்னி வைத்துக்கொண்டு சாப்பிடலாம்.