ஜூலை 18, சென்னை (Kitchen Tips): பீன்ஸ் பொரியல் (Beans Poriyal) தென்னிந்திய பாரம்பரிய உணவாகும். இது பச்சை பீன்ஸ், மசாலா, கறிவேப்பிலை மற்றும் தேங்காய் ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய உணவாகும். பீன்ஸ் பொரியல் மிகவும் சுவையாகவும், உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும். அந்த வகையில், பீன்ஸ் தேங்காய் பால் பொரியல் (Beans Thengai Paal Poriyal) எப்படி செய்வது என்பதை இதில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பீன்ஸ் - அரை கிலோ,
பெரிய வெங்காயம் - 2
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
கெட்டி தேங்காய் பால் - அரை கப்
பூண்டு - 4 பல்
எண்ணெய் - ஒன்றரை மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு. Husband-Wife Shot Dead: கணவன்-மனைவி துப்பாக்கியால் சுட்டுக்கொலை.. சிறுவன் தப்பியோட்டம்..!
செய்முறை:
முதலில் பீன்ஸை குறுக்குவாக்கில் ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்கி, தேவையான உப்பு சேர்த்து குக்கரில் அரை கப் தண்ணீர் ஊற்றி, ஒரு விசில் வைத்து வேகவைத்துக் கொள்ளவும்.
பின்னர் பூண்டை நசுக்கி, வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்க வேண்டும். அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் வெங்காயம், பூண்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும்.
சிறிது வதங்கியதும் வேக வைத்துள்ள பீன்ஸ், தேங்காய் பால், மிளகாய்த் தூள் சேர்த்துக் கொண்டு தேங்காய் பால் வற்றும் வரை நன்கு கிளறிவிட்டு பின்பு அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான பீன்ஸ் தேங்காய் பால் பொரியல் (Beans Coconut Milk Fritters) ரெடி.