மே 15, சென்னை (Kitchen Tips): உடல் எடையை குறைக்க உதவும் இந்த கட்லெட்கள் ஆரோக்கியமான காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. வெறும் 1 கரண்டி எண்ணெயில் சமைக்கக் கூடிய இவை, உடல் எடையை குறைக்கவும், உடலுக்கு போதுமான அளவு புரதத்தை உட்கொள்ளவும் இது உதவுகிறது. உடல் எடையில் ஒவ்வொரு 1 கிலோவிற்கும் 0.8 கிராம் புரதம் தேவைப்படுகிறது. உடல் எடை 60 கிலோ எனில், தினமும் 48 கிராம் புரதம் உட்கொள்ள வேண்டும். அந்த வகையில், பன்னீர் வெஜிடபுள் கட்லெட் (Paneer Vegetable Cutlets) எப்படி செய்வது என்பது பற்றி இதில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பன்னீா் - 500 கிராம்

உருளைக்கிழங்கு - 3

வெங்காயம் - 2

சோள மாவு - 5 கரண்டி

பூண்டு (பொடியாக நறுக்கியது) - அரை கப்

குடை மிளகாய், பீன்ஸ்,கோஸ், கேரட் - தலா கால் கப்

மஞ்சள் தூள், மிளகு தூள் , சீரக தூள், தனியா தூள், மிளகாய் தூள் - தலா ஒரு தேக்கரண்டி

பிரெட் தூள் - தேவையான அளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

உப்பு, எண்ணெய் தேவையான அளவு. Minor Girl Sexual Harassment: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 60 வயது முதியவர் போக்சோவில் கைது..!

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசித்து கொள்ளவும். பன்னீரை துருவிக்கொண்டு, கடாயில் எண்ணெய் விட்டு சூடேற்றி, பொடியாக நறுக்கிய வைத்துள்ள பூண்டை சேர்த்துக்கொள்ள வேண்டும். பின் வெங்காயம் சேர்த்து வதக்கி அதில் பீன்ஸ், கேரட், கோஸ் காய்கறிகளை போடவும்.

காய்கள் லேசாக வதங்கியவுடன், குடை மிளகாய் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். பின்னர், இதில் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து அதில் சீரக தூள், தனியா தூள், மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பின்பு, பன்னீர் சேர்த்து கிளறிவிட்டு கொத்தமல்லி இலையை தூவிவிட்டு இறக்கவும்.

ஆற வைத்த பின் கைகளால் பிசைந்து சிறுசிறு பகுதிகளாக பிரித்து உருண்டைகளாக உருட்டி, கட்லெட் வடிவில் செய்துகொள்ள வேண்டும். மேலும், சோள மாவுடன் நீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.

கட்லெட்டுகளை சோளமாவு கலவையில் முக்கி, பிரெட் தூளில் நன்றாக பிரட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றி செய்து வைத்த கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுத்தால், சுவையான பன்னீர் வெஜிடபுள் கட்லெட் ரெடி.