மே 15, ஜோலார்பேட்டை (Tirupathur News): திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதி திருப்பதி-சத்யா (வயது 35). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பதி, அவரது மனைவி சத்யா மற்றும் மகன் ஆகியோர் அருகில் உள்ள நிலத்தில் கேழ்வரகு அறுவடை செய்வதற்காக சென்றுள்ளனர். இவர்களது 5-ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். Copper Mine Accident: ராஜஸ்தான் தாமிர சுரங்க விபத்து; 5 மணிநேர போராட்டத்துக்குப் பின் 14 பேர் மீட்பு..! ஒருவர் பலி..!

அப்போது, ஊசிநாட்டான் வட்டம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் (வயது 60) என்ற முதியவர், அவரது மனைவி இறந்த நிலையில், வக்கணம்பட்டி பகுதியில் உள்ள தனது மகள் மேனகா வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை கண்டு, அக்கம் பக்கம் சுற்றி பார்த்துவிட்டு, சிறுமியை கொஞ்சி விளையாடுவது போல அழைத்து அவரது மடியில் அமர வைத்து சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளார். மேலும், பாலியல் சீண்டலில் (Sexual Harassment) ஈடுபட்ட போது, வலியால் சிறுமி அலரியதால் அப்படியே விட்டு சென்றுள்ளார்.

பின்னர் உடலில் வலி ஏற்பட்டதால், சிறுமி இதுகுறித்து அவரது தாயார் சத்யாவிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதற்கு, தங்கவேல் குடும்பத்தினர் மறுத்து அவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமியின் பெற்றோர், திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் கொடுத்துள்ளனர். புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தங்கவேல் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.