Vazhai Ilai Kozhukattai Recipe: ஆரோக்கியமான வாழை இலை கொழுக்கட்டை செய்வது எப்படி..?
சத்தான வாழை இலை கொழுக்கட்டை எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
ஆகஸ்ட் 02, சென்னை (Kitchen Tips): கொழுக்கட்டை பொதுவாக விசேஷ நாட்களில் சாமி தரிசனத்திற்கு படைப்பது வழக்கம். கொழுக்கட்டைகளில் பல வகைகள் உள்ளது. அந்தவகையில் வாழை இலை கொழுக்கட்டை (Vazhai Ilai Kozhukattai) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - முக்கால் கப்
நெய் - 2 தேக்கரண்டி
தண்ணீர், எண்ணெய், உப்பு- தேவையான அளவு
பூர்ணம் செய்ய தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - அரை கப்
நாட்டுச் சர்க்கரை - முக்கால் கப்
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
தண்ணீர் - அரை கப். Soya Chukka Recipe: சோயா சுக்கா சுவையாக செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
செய்முறை:
முதலில் நாட்டுச் சர்க்கரையையை சுடுநீரில் போட்டு கரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை அடுப்பில் வைத்து, ஓரளவு கெட்டியாக வந்ததும், அதனை இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பவுலில் அரிசி மாவு, உப்பு சேர்த்து கிளறிவிட்டு, சுடுநீரை கொஞ்சமாக ஊற்றி கரண்டியின் பிடியைக் கொண்டு கிளறி விட வேண்டும். பின்பு மாவானது சற்று வெதுவெதுப்பான நிலைக்கு வந்த பின்னர், கையால் மென்மையாக பிசைந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை சேர்த்து குறைவான தீயில் பொன்னிறமாக வறுத்து அதில் தண்ணீரை ஊற்றி, மென்மையாக வேக வைக்க வேண்டும்.
பின் அதனை நன்கு மசித்து, அதில் வெல்லப் பாகு சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும். அதில் உள்ள நீர் முற்றிலும் வற்றியதும், நெய் சேர்த்து கிளறிவிட்டு, சிறிது நேரம் கிளறி குளிர விட வேண்டும்.
பிறகு வாழை இலையை சதுரங்களாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாழை இலையை எடுத்து, அதில் எண்ணெய் சிறிது தடவி, பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து உருண்டையாக உருட்டி, பின் வட்டமாக தட்டி, அதன் ஒரு பாதியில் பாசிப்பருப்பு கலவை சிறிது வைத்து, வாழை இலையுடன் சேர்த்து மடித்துக் கொள்ளவும்.
மடிக்கும் போது, முனைகளை நன்கு ஒட்டி விட வேண்டும். இதே போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும். பின் இட்லி பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, அதில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும். அதில் இட்லி தட்டில் மடித்து வைத்துள்ள வாழை இலைகளை வைத்து, மூடி வைத்து சுமார் 10 நிமிடங்கள் வேக வைத்து இறக்கினால், சுவையான வாழை இலை கொழுக்கட்டை ரெடி.
(The above story first appeared on LatestLY on Aug 02, 2024 03:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

