ஆகஸ்ட் 01, சென்னை (Kitchen Tips): சோயா பயன்படுத்தி சுவையான சோயா சுக்கா (Soya Chukka) எப்படி செய்வது என்பதை இதில் பார்ப்போம். சோயா சுக்கா, அருமையான சுவையில் மட்டன் சுக்கா போன்று சாதத்திற்கும், பரோட்டா மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைடிஷ் ஆக இருக்கும். இவற்றை சுவையாக எப்படி தயார் செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
சோயா - 1 கப்
பெரிய வெங்காயம், தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மசாலா பொடி அரைக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
மிளகு, சீரகம் - ஒரு தேக்கரண்டி
தனியா - 2 மேசைக்கரண்டி
வரமிளகாய் - 7. Mullangi Bonda Recipe: சுவையான முறையில் முள்ளங்கி போண்டா செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
தாளிக்க:
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 2
சோம்பு - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
முதலில் சோயாவை எடுத்து கழுவி தண்ணீரில் வேக வைத்து இரண்டு முதல் மூன்று முறை தண்ணீரை மாற்றி, நன்கு பிழிந்து எடுத்து வைக்கவும்.
வறுத்து பொடி செய்வதற்காக, ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், தனியா, வரமிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து, பின் ஆறவிட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
தாளிப்பதற்கு தேவையான பொருட்களான கிராம்பு, பட்டை, சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை தாளித்து எடுத்து வைக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி விடவும்.
மேலும், மஞ்சள் தூள், உப்பு, அரைத்த பொடி சேர்த்து, 1கப் தண்ணீர் விட்டு பச்சை வாசனை போகும் வரை வேகவைக்க வேண்டும்.
அதில் கரம் மசாலா சேர்த்து, நன்கு கலக்கிவிட்டு பிழிந்து எடுத்து வைத்த சோயாவை சேர்த்து மூடி, நன்கு வேகவிடவும். தண்ணீர் வற்றி சுருண்டு வரும் பொழுது, அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான சோயா சுக்கா ரெடி.