Egg Garlic Spice Recipe: ஆந்திரா ஸ்டைல் முட்டை பூண்டு மசாலா செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
ஆந்திரா ஸ்பெஷல் காரசாரமான முட்டை பூண்டு மசாலா எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
அக்டோபர் 15, சென்னை (Kitchen Tips): முட்டையை வைத்து செய்யக்கூடிய எல்லா ரெசிபிகளுமே மிகவும் எளிதானது. அந்தவகையில் சற்று வித்தியாசமாக ஆந்திரா ஸ்டைல் முட்டை பூண்டு மசாலா செய்து சாப்பிடலாம். முட்டை மற்றும் பூண்டு உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்ககூடியவை. இந்த உணவு ஆந்திராவில் முட்டை வெள்ளுள்ளி காரம் என்று அழைக்கப்படுகிறது. வெள்ளுள்ளி என்றால் பூண்டு என அர்த்தம். காய்ச்சலில் இருந்து மீண்டு குணமடையும் போது நம் வாய் காரசாரமான உணவுகளை விரும்பும். அப்போது, இந்த முட்டை பூண்டு மசாலா (Muttai Poondu Masala) செய்து சாப்பிடலாம். இதனை எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
முட்டை - 10
பூண்டு - 25 பல்
சீரகம் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 6 கரண்டி
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 3
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு. Kollu Rice Recipe: சத்தான கொள்ளு சாதம் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
செய்முறை:
- முதலில் முட்டையை தண்ணீரில் போட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து மிதமான தீயில் சுமார் 10 நிமிடங்களுக்கு வேகவைக்க வேண்டும்.
- அடுத்து, பூண்டு உரித்து அம்மியில் போட்டு அரைக்கவும். இதனுடன் சீரகம் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு இடித்து அரைக்கவும்.
- அடுத்ததாக மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து, கடாயில் ஆறு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு வெடித்தவுடன், சீரகம் மற்றும் தேவையான அளவு கறிவேப்பில்லை போட்டு வறுக்க வேண்டும்.
- இதன்பிறகு, பெரிய வெங்காயத்தை பொடிதாக நறுக்கி கடாயில் சேர்க்கவும். கொஞ்சம் உப்பு போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு அம்மியில் அரைத்த பூண்டு மசாலா மற்றும் கால் மஞ்சள் தூள் போட்டு கலந்து கொள்ளவும்.
- சுமார் இரண்டு நிமிடங்கள் வதக்கிய பிறகு வேக வைத்த முட்டைகளின் தோல் உரித்து கடாயில் போட்டு, பூண்டு மசாலாவுடன் நன்கு கலக்க வேண்டும்.
- அடுத்து 2 நிமிடங்கள் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி, விரும்பினால் கொத்தமல்லி சேர்க்கலாம். அவ்வளவுதான் சுவையான முட்டை பூண்டு மசாலா (Egg Garlic Spice) ரெடி.
(The above story first appeared on LatestLY on Oct 15, 2024 02:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

