அக்டோபர் 14, சென்னை (Kitchen Tips): கொள்ளு (Horse Gram) பல காலமாக பல்வேறு உடல்நல பிரச்சனைகளை நீக்க பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக மாதவிடாய் பிரச்சனை மற்றும் உடல் எடையை குறைக்கவும், கட்டுப்படுத்தவும் கொள்ளு உதவுகிறது. அந்தவகையில், கொள்ளு வைத்து ஒரு சுவையான சாதம் (Kollu Rice) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 150 கிராம்
அரிசி - 1 கப்
தக்காளி - 3
பெரிய வெங்காயம் - 2
வரமிளகாய் - 3
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
எலுமிச்சை - கால் பழம்
பூண்டு - 10 பல்
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு. Sorakkai Paruppu Kuzhambu Recipe: சுரைக்காய் பருப்பு குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
செய்முறை:
- முதலில் கொள்ளை லேசாக எண்ணெய் இல்லாமல் வறுத்து தண்ணீரில் சுமார் 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் ஊற்றவும், காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் போட்டு தாளித்து, கறிவேப்பிலை, பெருங்காயம், பூண்டு, வரமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் கொள்ளு சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.
- அதனுடன் ஒரு பங்குக்கு 3 பங்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சுமார் அரைமணி நேரம் ஊற வைத்த அரிசியை அலசிச் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வைத்து வேகவைக்க வேண்டும்.
- பின் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, ஆவி போனதும் எலுமிச்சம்பழ சாற்றைச் சேர்த்து சாதம் குழையாமல் கிளறி பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான கொள்ளு சாதம் (Kollu Sadam) ரெடி.