Idli Maavu Kara Bonda Recipe: இட்லி மாவு வைத்து சுடச்சுட கார போண்டா செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

காரசாரமான இட்லி மாவு கார போண்டா ரெசிபி எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Idli Maavu Kara Bonda Recipe: இட்லி மாவு வைத்து சுடச்சுட கார போண்டா செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
Idli Maavu Kara Bonda (Photo Credit: YouTube)

நவம்பர் 21, சென்னை (Kitchen Tips): பொதுவாகவே, மாலை வேளையில் டீ, காபி குடிக்கும் போது சூடாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். குறிப்பாக, மழைக் காலங்களில் சூடாக காரசாரமாக சாப்பிட தோணும். அப்போது, வீட்டில் இட்லி மாவு இருந்தால் போதும், அதை வைத்து சுவையான கார போண்டா செய்து சாப்பிடலாம். இட்லி மாவு கார போண்டா (Idli Maavu Kara Bonda) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். Nethili Karuvadu Fry Recipe: நெத்திலி கருவாடு வறுவல் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

புளித்த இட்லி மாவு - 1 கப்

ரவை - 2 மேசைக்கரண்டி

அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி

சீரகம் - கால் தேக்கரண்டி

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

பூண்டு - 3 பல்

வரமிளகாய் - 3

கறிவேப்பிலை - 1 கொத்து

கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். பின், அதில் அரிசி மாவு மற்றும் ரவையை சேர்த்து நன்கு கலந்து, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
  • அதே போல் வரமிளகாயை சுடுநீரில் போட்டு, 10 நிமிடம் ஊறவைத்து, வரமிளகாயை மிக்ஸியில் போட்டு, அத்துடன் பூண்டு பற்களை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு ஊற வைத்த மாவுடன், அரைத்த வரமிளகாய் விழுதை சேர்த்து நன்கு கலந்து, பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் சீரகம் சேர்த்து நன்கு கைகளால் கலந்து கொள்ளவும்.
  • இறுதியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை, கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான இட்லி மாவு கார போண்டா ரெடி.

(The above story first appeared on LatestLY on Nov 21, 2024 02:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).