நவம்பர் 20, சென்னை (Kitchen Tips): கருவாட்டு பிரியரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்காக ஒரு சூப்பரான ரெசிபி இதோ. உங்கள் வீட்டில் நெத்திலி கருவாடு இருக்கிறதா? அப்படியானால் அதில் வறுவல் செய்து சாப்பிடுங்கள். இந்த வறுவல் சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவர். அப்படிபட்ட சுவையான நெத்திலி கருவாடு வறுவல் (Nethili Karuvadu Fry) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
நெத்திலி மீன் கருவாடு - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரை மேசைக்கரண்டி
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு World Children's Day 2024: "இந்த உலகத்தை ஒளிரச் செய்யும் ஒளி நீங்கள்.." குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்..!
செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நெத்திலி மீன் கருவாட்டை அதன் தலைப்பகுதியை நீக்கி விட்டு வெந்நீரில் நன்கு அலசி எடுத்து தனியே வைக்க வேண்டும். பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் நிறம் மாற வதங்கியவுடன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் மிளகாய்த்தூள், சோம்புத்தூள் சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வைத்துள்ள நெத்திலி கருவாட்டினை சேர்க்க வேண்டும். தீயை மிதமாக வைத்து கருவாடு வெந்ததும் கிரேவி டிரையாகி கருவாட்டோடு சேரும் அளவுக்கு நன்கு வதக்கி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான நெத்திலி கருவாடு வறுவல் ரெடி.