ஏப்ரல் 06, சென்னை (Kitchen Tips): கோடைகாலத்தில் தவிர்க்க முடியாத பழங்களில் மாம்பழம் உள்ளது. அந்தவகையில், மாம்பழத்தை கொண்டு ஃபலூடா எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பால் - 2 கப்

கண்டெண்ஸ்டு மில்க் - 4 மேசைக்கரண்டி

மாம்பழக்கூழ் - 4 மேசைக்கரண்டி

மாம்பழத் துண்டுகள் - 4 மேசைக்கரண்டி

வெண்ணிலா ஐஸ்க்ரீம், மாம்பழ ஐஸ்க்ரீம் - 4 மேசைக்கரண்டி

சர்க்கரை - 4 மேசைக்கரண்டி

ஜெல்லித் துண்டுகள் (குளிர்படுத்தப்பட்டது) - 2 மேசைக்கரண்டி

ஃபலூடா சேமியா - 2 மேசைக்கரண்டி

ரோஸ் சிரப் - 2 மேசைக்கரண்டி

பொடித்த நட்ஸ் வகைகள் - 4 மேசைக்கரண்டி

துளசி விதைகள் - 2 தேக்கரண்டி. Young Man Cheated And Raped: இளம்பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்த வாலிபர்; திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் 10 ஆண்டு காலம் சிறைதண்டனை..!

செய்முறை:

முதலில் துளசி விதைகளை அரை கப் தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அடுத்து, ஃபலூடா சேமியாவை வேகவைக்கவும். பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும். இதில் சர்க்கரை சேர்த்துகொள்ளவும். பின்பு, பாத்திரத்தை கீழே இறக்கி, பால் ஆறிய பிறகு குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். பின்னர், உயரமான கண்ணாடி டம்ளரில் ஊறவைத்த துளசி விதைகளை போட வேண்டும். அடுத்ததாக ஜெல்லித் துண்டுகள், கண்டெண்ஸ்டு மில்க், ஃபலூடா சேமியா, மாம்பழத் துண்டுகள், மாம்பழக்கூழ், குளிர்விக்கபட்ட பால் என அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கொள்ளவும். பிறகு ஐஸ்க்ரீம் மற்றும் அதன் மேலே ரோஸ் சிரப் ஊற்றி நட்ஸ் வகைகளை மேலாக தூவிவிட்டு, அதன்பிறகு அருமையான மாம்பழ ஃபலூடா தயார்.