Prison Arrest File Pic (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 06, விழுப்புரம் (Villupuram News): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தாமூரைச் சேர்ந்த அய்யனார் என்பவரது மகன் பாலகுமார் (வயது 28). இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு முதல், 23 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இளம்பெண்ணின் வீட்டில் இதுபற்றி தெரியவந்தது. இதனால், அந்த இளம்பெண் கடந்த 2020-ஆம் ஆண்டு பாலகுமாரிடம் சென்று தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து, கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதற்கு பாலகுமாரின் தந்தை மற்றும் தாய் ஆதரவாக இருந்துள்ளனர். Flight Service Cancelled Due To Heavy Rain: கனமழை காரணமாக விமான சேவை ரத்து – பயணிகள் அவதி..!

இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், இளம்பெண்ணை ஏமாற்றிய பாலகுமார், அவரது பெற்றோர் அய்யனார், நாவம்மாள் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும், விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் (Villupuram Womens Court) இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மிஸ், குற்றவாளியான பாலகுமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, இவ்வழக்கில் இவருடைய பெற்றோரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்துள்ளார். மேலும், பாதிப்படைந்த பெண்ணுக்கு அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.