டிசம்பர் 02, சென்னை (Kitchen Tips): எப்போதும் போல காலையில் இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஒரே மாதிரியான சைடிஷ் செய்வதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக வெள்ளை குருமா செய்யலாம். அதுவும் மீல்மேக்கர் வைத்து சுவையான ருசியான வெள்ளை குருமா செய்து சாப்பிடலாம். இந்த மீல்மேக்கர் வெள்ளை குருமா (Meal Maker White Kurma) சுவையாக எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். Ulli Theeyal Recipe: கேரளா ஸ்பெஷல் உள்ளி தீயல் ரெசிபி செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
குருமா செய்ய தேவையானவை:
மீல் மேக்கர் - 1 கப்
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பட்டை - 1 துண்டு
கல்பாசி - சிறு துண்டு
பிரியாணி இலை - 1
வெங்காயம் - 1
புதினா - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க தேவையானவை:
தேங்காய் - கால் கப்
முந்திரி - 6
பச்சை மிளகாய் - 4
கிராம்பு - 2
இஞ்சி - 1 இன்ச்
பட்டை - 1 துண்டு
பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி
கசகசா, சோம்பு - தலா 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 7
செய்முறை:
- முதலில் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, பட்டை, கிராம்பு, கசகசா, சோம்பு, முந்திரி, பொட்டுக்கடலை மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு, மீல் மேக்கரை சுடுநீரில் 20 நிமிடம் ஊற வைத்து, பின் அதில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு, தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, கல்பாசி, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.
- பின், அதில் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கி, அதில் இஞ்சி பூண்டு விழுது, புதினா சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது மற்றும் தேவையான அளவு நீரையும், உப்பையும் சேர்த்து, நன்கு 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான மீல் மேக்கர் வெள்ளை குருமா ரெடி.