நவம்பர் 30, சென்னை (Kitchen Tips): உள்ளி தீயல் என்பது சின்ன வெங்காயம் வைத்து செய்யும் ஒரு கிரேவி. இது மிகவும் சுவையாக, காரசாரமாக இருக்கும். சின்ன வெங்காயம், புளி, வறுத்த தேங்காய் மற்றும் மசாலாக்கள் சேர்த்து செய்யப்படும் இந்த உள்ளித் தீயல் கேளராவின் பாரம்பரிய ரெசிபிகளில் ஒன்றாகும். மிகக் குறைந்த பொருள்கள் மட்டுமே பயன்படுத்தி செய்யப்படும் உள்ளித் தீயலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுடன் கூட சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். இந்த உள்ளி தீயல் (Ulli Theeyal) ரெசிபியை எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். Vendakkai Podi Curry Recipe: வெண்டைக்காய் பொடி கறி ருசியாக செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 1 கப்
தேங்காய் துருவல் - கால் கப்
தனியா - 1 மேசைக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
வற்றல் மிளகாய் - 3
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையானவை:
தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
வற்றல் மிளகாய் - 2
செய்முறை:
- முதலில் கடாயை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும் தனியா, மிளகு, மிளகாய் சேர்த்து நன்கு வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வறுத்து எடுக்கவும். வறுத்த தேங்காய் கலவையை சூடாறியவுடன், மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- பின்னர், கடாயை சூடு செய்து எண்ணை ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை,தோல் உரித்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, பின்பு அரைத்த விழுது, உப்பு கலந்து மிதமான சூட்டில் வேகவைக்க வேண்டும்.
- ஒரு கரண்டியில் எண்ணை ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, வற்றல், தேங்காய் துருவல் சேர்த்து தாளித்து, மசாலா சேர்ந்து கொதிக்கும் குழம்பில் சேர்த்து பாத்திரத்திற்கு மாற்றவும். இப்போது சுவையான உள்ளி தீயல் ரெடி. இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.