Egg Sukka Recipe: அட்டகாசமான சுவையில் முட்டை சுக்கா செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

சுவையாக முட்டை சுக்கா ரெசிபி எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் காண்போம்.

Egg Sukka Recipe: அட்டகாசமான சுவையில் முட்டை சுக்கா செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
Muttai Sukka Recipe (Photo Credit: YouTube)

ஜனவரி 29, சென்னை (Kitchen Tips): பொதுவாக வீடுகளில் முட்டை வைத்து நிறைய ரெசிபிகள் செய்து சாப்பிடுவது வழக்கம். இறைச்சி இல்லாத நாட்களில் அசைவ உணவின் இடத்தை நிரப்புவதும் முட்டைதான். முட்டை சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவாகும். முட்டையை வேகவைத்து, பொரியல் செய்து, ஆம்லெட் போட்டோ சாப்பிடுவோம். மேலும், முட்டை குழம்பு வைத்து சாப்பிடுவோம். அப்படிபட்ட முட்டையை வைத்து முட்டை சுக்கா செய்து சாப்பிடலாம். காரசாரமான முட்டை சுக்காவை (Muttai Sukka Recipe) எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் பார்ப்போம். Cauliflower Fry Recipe: சாதத்துக்கு ஏற்ற காலிபிளவர் வறுவல் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

முட்டை - 6

எண்ணெய் - 4 கரண்டி

கரம் மசாலா - 1 கரண்டி

மிளகாய்த்தூள் - 1 கரண்டி

சோம்பு - கால் கரண்டி

சின்ன வெங்காயம் - 20

பச்சை மிளகாய் - 3

இலவங்கப்பட்டை - 1 துண்டு

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

அரைக்க தேவையானவை:

2 ஸ்பூன்மிளகு

1 ஸ்பூன் சீரகம்

செய்முறை:

  • முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாதியளவு தண்ணீர் ஊற்றி முட்டைகளை அதில் போட்டு சிறிது கல் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  • ஒரு மிக்ஸியில் மிளகு மற்றும் சீரகத்தை சேர்த்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். முட்டை நன்றாக வெந்ததும் முட்டையை தனியாக எடுத்து. முட்டை ஓட்டை உடைத்து, மஞ்சள் கரு உடையாமல் தனியாக உரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு முட்டையின் வெள்ளை கருவை சிறு சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். அடுத்து வேறொரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சூடானதும் பட்டை, சோம்பு சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
  • அதன்பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் கரம் மசாலா, மிளகாய் தூள், கறி மசாலா சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • மசாலா பச்சை வாசனை போனதும், அரைத்து வைத்த மிளகு, சீரகப் பொடியையும் அதனுடன் சேர்த்து போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்பு மசாலா நன்றாக வதங்கியதும் அதனுடன் நாம் வெட்டி வைத்திருக்கும் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும்.
  • இறுதியாக, மஞ்சள் கருவை சேர்த்து மஞ்சள் கரு உடையாமல் கிளறி விடவும். 2 நிமிடம் அப்படியே மூடி வைக்கவும். சிறிது கொத்தமல்லியை தூவி கடாயை இறக்கினால், காரசாரமான முட்டை சுக்கா ரெடி.

(The above story first appeared on LatestLY on Jan 29, 2025 02:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).