Cauliflower Fry (Photo Credit: YouTube)

ஜனவரி 25, சென்னை (Kitchen Tips): வீட்டில் மதிய உணவுக்கு சிறந்த சைடிஸ் ஆக வறுவல், பொரியல் ரெசிபிகள் உள்ளன. அந்தவகையில், காலிபிளவர் வைத்து வறுவல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். காலிபிளவர் வறுவல் (Cauliflower Fry) ரெசிபி சுவையாக எப்படி சமைப்பது என்பதனை இப்பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:

காலிபிளவர் - 1

பெரிய வெங்காயம் - 1

மிளகாய்த்தூள் - அரை கரண்டி

பூண்டு - 4 பல்

மஞ்சள் தூள் - அரை கரண்டி

சீரகம் - அரை கரண்டி

மிளகுத்தூள் - அரை கரண்டி

உப்பு - தேவையான அளவு. Kathirikkai Gravy Recipe: சுவையான கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

செய்முறை:

  • முதலில் காலிபிளவரை வெட்டி சுத்தம் செய்து உப்பு தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு வைக்கவும். வெங்காயத்தை மெல்லியதாக நீள நீளமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • அடுத்து, ஒரு பாத்திரத்தில் நான்கு கரண்டி எண்ணெய்விட்டு முதலில் வெங்காயத்தை போட்டு சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்தெடுக்கவும்.
  • பிறகு, அதே பாத்திரத்தில் மேலும் இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு, நறுக்கி வைத்துள்ள காலிபிளவர் துண்டுகளை சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாகும் வரை வறுத்தெடுக்க வேண்டும்.
  • மேலும், 2 கரண்டி எண்ணெய் ஊற்றி, சீரகம் போட்டு பொரிந்ததும் தட்டி வைத்த பூண்டுகளைப்போட்டு பொரித்து வைத்துள்ள வெங்காயம், காலிபிளவர் சேர்த்து மிளகுத்தூள், காரப்பொடி, கறிவேப்பிலை போட்டு கலந்துவிட்டால், சுவையான காலிபிளவர் வறுவல் ரெடி.