Pasipayaru Gravy (Photo Credit: YouTube)

நவம்பர் 23, சென்னை (Kitchen Tips): நாம் சாப்பிடும் அனைத்து வகையான பயறுகளிலும் பல விதமான சத்துக்கள் உள்ளன. பாசிப்பயறு (Mung Bean) அல்லது பச்சைப்பயறு எனக் கூறப்படும் பயறில் அதிகமான புரத சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த பயறை நாம் அடிக்கடி உணவில் சேர்க்கும் போது உடல் வலுப்பெறும். மேலும், இந்த பாசிப்பயறை வைத்து சுவையான கிரேவி செய்து சாப்பிட்டால் அதனை சப்பாத்தி, தோசை, சூடான சாதம் என எல்லா விதமான உணவுக்கும் செம்ம ருசியாக இருக்கும். இந்த பாசிப்பயறு கிரேவி (Pasipayaru Gravy) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். Poosani Sambar Recipe: முருகனுக்கு பிடித்த பூசணி சாம்பார் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

பாசிப்பயறு - 1 கப்

வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - ஒன்றரை தேக்கரண்டி

சீரகம் - முக்கால் தேக்கரண்டி

பட்டை - 2 துண்டு

கிராம்பு - 4

பிரியாணி இலை - 1

பூண்டு - 5 பல்

குழம்பு மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிதளவு

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பயறை சேர்த்து நல்ல மணம் வந்து, லேசாக நிறம் மாறும் வரை வறுத்து இறக்கி, நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர், ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • பின்பு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக்கொள்ளவும்.
  • பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.அடுத்து அதில் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
  • பின் கழுவி வைத்துள்ள பாசிப்பயறை சேர்த்து நன்கு 1 நிமிடம் கிளறி விட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கொதிக்கவிட்டு, பின்பு குக்கரை மூடி 7 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
  • விசில் போனதும் குக்கரைத் திறந்து, நன்கு கிளறிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து 2 நிமிடம் கிளறி வேக வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான பாசிப்பயறு கிரேவி ரெடி.