Poosani Sambar (Photo Credit: YouTube)

நவம்பர் 22, சென்னை (Kitchen Tips): இதுவரை பூசணியைக் (Pumpkin) கொண்டு பொரியல் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதைக் கொண்டு சாம்பார் செய்யலாம் என்பது தெரியுமா? பூசணிக்காய் இனிப்பு சுவையைக் கொண்டிருப்பதால் பலரும் இதைக் கொண்டு சாம்பார் செய்ய விரும்ப மாட்டார்கள். ஆனால் இதைக் கொண்டு சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும். இந்த சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முருகனுக்கு பிடித்தமான பூசணி சாம்பார் (Poosani Sambar) ருசியாக எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். Chicken Egg Poriyal Recipe: சிக்கன், முட்டை வைத்து இப்படி செஞ்சு பாருங்க.. அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - அரை கப்

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

தண்ணீர் - 2 கப்

பூசணிக்காய் - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

கடுகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

மல்லித் தூள் - 2 மேசைக்கரண்டி

புளிச்சாறு - 2 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

சர்க்கரை - அரை தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, அதில் மஞ்சள் தூள் மற்றும் 2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு, 5 நிமிடம் குறைவான தீயில் வைத்துவிட்டு பின் அடுப்பை அணைக்க வேண்டும்.
  • பின், விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை கரண்டியால் மசித்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்கவும்.
  • பிறகு அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, அதில் மஞ்சள் பூசணியை போட்டு நன்கு கிளறி விட வேண்டும். பின் அதில் தேவையான அளவு உப்பு, மசாலா பொடிகள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
  • பின்னர், அதில் வேக வைத்த பருப்பை சேர்த்து, அத்துடன் புளிச்சாறு மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு 5 முதல் 8 நிமிடம் வரை கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பூசணி சாம்பார் ரெடி.