Pepper Rasam Recipe: காரசாரமான மிளகு ரசம் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
சளி, இருமலை விரட்ட உதவும் மிளகு ரசம் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
செப்டம்பர் 16, சென்னை (Kitchen Tips): பெரும்பாலானவர்களுக்கு சளி, இருமல் தொல்லை இருக்கும். அந்த சமயத்தில் கசாயம், கஞ்சி அல்லது ரசம் செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்போம். இதில், குழந்தைகள் கசாயம் சாப்பிடுவதற்கு அடம் பிடிக்கும்போது, அவர்களுக்கு ரசம் தான் செய்துக் கொடுப்பார்கள். அந்தவகையில் மிளகு, சீரகம், பூண்டு போன்றவற்றைப் பயன்படுத்தி செய்யக்கூடிய ரசம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவியாக இருக்கும். இந்த ரசத்தில் மிளகு (Milagu Rasam) மற்றும் பூண்டு சேர்வதால் காரமாக இருக்கும். மிளகு, பூண்டு போன்றவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவியாக இருக்கும். அப்படிப்பட்ட மிளகு ரசம் (Pepper Rasam) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம். Onion Pakoda Recipe: ருசியாக மொறுமொறு வெங்காய பக்கோடா செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
மிளகு - 3 மேசைக்கரண்டி
சீரகம் - 3 மேசைக்கரண்டி
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 2
பூண்டு - சிறிதளவு
பெருங்காயத் தூள் - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் மிக்ஸியில் மிளகு, சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் போன்றவற்றை அரைத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
- பின்னர், ஒரு பாத்திரத்தில் புளியை ஊறவைத்து கரைசலாக எடுத்துக் கொள்ளவும். அதனுடன் தக்காளியையும் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
- இதனையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, சீரகம், மிளகாய் வத்தல், கறிவேப்பிலை போன்றவற்றை சேர்த்து தாளித்து, பின்னர், அரைத்து வைத்து மிளகு கரைசலையும் சேர்த்துக் கொள்ளவும்.
- இதனுடன் சிறிதளவு பெருங்காயத் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். வதங்கும் போதே சிறிதளவு மஞ்சள் தூளைச் சேர்த்துக் கொள்ளலாம். பின்பு, இதனுடன் கரைத்து வைத்துள்ள புளி, தக்காளி கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து இறக்கினால் போதும். மேலும், அதிகமாக கொதிக்க கூடாது. லேசாக கொதி வந்தவுடன் இறக்கிவிட வேண்டும். இறுதியில் கொத்தமல்லி இலைகளை தூவி விட்டு இறக்கவும். அவ்வளவுதான் காரசாரமான மிளகு ரசம் ரெடி.
(The above story first appeared on LatestLY on Sep 16, 2024 02:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

