செப்டம்பர் 14, சென்னை (Kitchen Tips): இன்றைய தலைமுறையினர் மாலைநேரங்களில் பெரும்பாலும் நூடுல்ஸ், ஃபிரெஞ்ச் ஃபிரைஸ், சிக்கன் ரைஸ் போன்ற பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் சாப்பிடுகின்றனர். இதனை தவிர்த்து, வீட்டிலேயே சுலபமாக வெங்காய பக்கோடா (Vengaya Pakoda)செய்து சாப்பிடலாம். இது எலுமிச்சை சாதம், புளியோதரை ஆகியவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும். அந்தவகையில் ஆனியன் பக்கோடா (Onion Pakoda) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - கால் கிலோ
கடலை மாவு - 150 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
பூண்டு - 50 கிராம்
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
டால்டா - 3 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
கடலெண்ணெய் - தேவையான அளவு. Beetroot Laddu Recipe: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் பீட்ரூட் லட்டு செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
செய்முறை:
- முதலில் வெங்காயத்தை உதிர் உதிராக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இதனுடன் இடித்த பூண்டு, பச்சை மிளகாய், சோம்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- அடுத்ததாக பக்கோடாவிற்கு தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், பெருங்காயம், டால்டா போட்டு நன்றாக கலந்துகொள்ளவும். இப்போது, கடலை மாவு மற்றும் அரிசி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி மாவு பக்கோடாவிற்கு மொறுமொறுப்பை கொடுக்கும்.
- பிறகு, கையளவு கறிவேப்பிலை எடுத்து அதை நன்கு பொடிதாக நறுக்கவும். வெங்காய பக்கோடாவின் சுவைக்கு கறிவேப்பிலை முக்கியமாகும். பக்கோடாவை எண்ணெயில் உதிர் உதிராக வறுக்கும் பதத்திற்கு கொஞ்சமாக தண்ணீர் தெளித்து தெளித்து சேர்க்க வேண்டும்.
- நன்கு கலந்து வைத்து சுமார் 5 நிமிடத்திற்கு ஊற வைக்கவும். பக்கோடாவை கடலெண்ணெயில் வறுப்பது நல்லது. கடாயில் கடலெண்ணெய் ஊற்றி சூடான பிறகு, வெங்காய பக்கோடா மாவை போடவும்.
- எண்ணெய் சூடான பிறகு தீயை மிதமான அளவிற்கு குறைத்து 8 முதல் 10 நிமிடங்களுக்கு பொரிய விட்டால் சுவையான வெங்காய பக்கோடா ரெடி.