Brinjal Milagu Kootu Recipe: கத்திரிக்காய் மிளகு கூட்டு சுவையாக செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
வீட்டில் சுலபமாக கத்திரிக்காய் மிளகு கூட்டு எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
செப்டம்பர் 19, சென்னை (Kitchen Tips): கத்திரிக்காய் (Brinjal) எப்போதும் வீட்டில் இருக்கும் காய்கறிகளுள் ஒன்றாகும். இந்த கத்திரிக்காய் (Kathirikai) வைத்து எப்போதும் போல ஒரே மாதிரியாக செய்யாமல், சற்று வித்தியாசமாக கத்திரிக்காய் மிளகு கூட்டு (Kathirikai Milagu Kootu) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். இதனை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 200 கிராம்
பாசிப்பருப்பு - அரை கப்
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு. Pachai Milagai Thokku Recipe: காரசாரமான பச்சை மிளகாய் தொக்கு செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
அரைக்க தேவையானவை:
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
தாளிக்க தேவையானவை:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- முதலில் கத்திரிக்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். அடுத்து தேங்காய், வெங்காயம், சீரகம் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- இதனிடையே பாசிப்பருப்பை சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பருப்பு லேசாக வேகவைக்க வேண்டும். வெந்த பின்பு நறுக்கிய கத்திரிக்காய் சேர்க்கவும்.
- இதன்பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும். மேலும், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வேகவைக்க வேண்டும்.
- வெந்த பின்பு அரைத்த தேங்காய் விழுது சேர்த்து, நன்கு ஒரு சேர கொதிக்க விடவும். பின் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை தாளித்து கொட்டி கலந்துவிடவும். அவ்வளவுதான் சுவையான கத்திரிக்காய் மிளகு கூட்டு (Brinjal Milagu Kootu) ரெடி.
(The above story first appeared on LatestLY on Sep 19, 2024 06:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

