Pachai Milagai Thokku (Photo Credit: YouTube)

செப்டம்பர் 19, சென்னை (Kitchen Tips): ஆரோக்கியம் நிறைந்த உணவு வகைகளை தினம்தோறும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. அந்தவகையில், பச்சை மிளகாயில் (Green Chilli) பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இதை வெறுமனே சாப்பிட முடியாது. அதனால், சுவையான முறையில் பச்சை மிளகாய் தொக்கு செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். காரத்தை குறைத்து எண்ணெய்-ல் தாளித்து தயார் செய்தால் பல நாட்களுக்கு கெடாது. இதனை வெறும் 15 நிமிடங்களில் தயார் செய்துவிடலாம். அப்படிப்பட்ட பச்சை மிளகாய் தொக்கு (Pachai Milagai Thokku) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இதனை தயிர் சாதத்துடன் தொட்டு அல்லது சாதத்துடன் பிரட்டி சாப்பிடலாம். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கும்போது, கஞ்சியுடன் சேர்த்து சாப்பிட்டால் விரைவில் குணமாகும். Vendakkai Paruppu Sadam Recipe: வெண்டைக்காய் பருப்பு சாதம் சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

பச்சை மிளகாய் - 150 கிராம்

குண்டு மிளகாய் - 10

கடலெண்ணெய் - 8 கரண்டி

நல்லெண்ணெய் - 2 கரண்டி

கடுகு - 1 கரண்டி

வெல்லம் - 1 தேக்கரண்டி (பவுடர்)

பெருங்காயத் தூள் - அரை கரண்டி

புளி - 25 கிராம்

கறிவேப்பிலை - சிறிதளவு

கல் உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் பச்சை மிளகாயை தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு பொடிதாக நறுக்கி கொள்ளவும். பின், கடாயில் கடலெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு பச்சை மிளகாயை போட்டு வதக்க வேண்டும். .
  • அடுத்து, குண்டு மிளகாய் எடுத்து அதற்குள் இருக்கும் விதைகளை நீக்கி கடாயில் போடவும். பச்சை மிளகாய், குண்டு மிளகாய் நன்கு வறுபட்டவுடன் மிக்ஸியில் போட்டு 50 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல அரைக்கவும்.
  • அதே கடாயில் மீதம் இருக்கும் எண்ணெய்யில் கடுகு, கொஞ்சம் கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் போட்டு வதக்கவும். கடுகு பொறிந்தவுடன் மிக்ஸியில் அரைத்த மிளகாய் பேஸ்ட்டை சேர்க்கவும். இன்னும் கொஞ்சம் 50 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.
  • இதனை நன்கு கொதிக்க விடவும். இதனிடையே தேவையான அளவு கல் உப்பு மற்றும் 25 கிராம் புளியை 50 மில்லி லிட்டர் சுடு தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.
  • பிறகு பவுடர் வெல்லம் சேர்த்து நன்றாக கொதித்தவுடன் எண்ணெய் பிரிந்து தொக்கு நிறம் பச்சையில் இருந்து சிவப்புக்கு மாறி இருக்கும். அப்போது, நல்லண்ணெய் ஊற்றி கலந்து தண்ணீர் படாத இடத்தில் வைக்க வேண்டும். அவ்வளவுதான் ருசியான பச்சை மிளகாய் தொக்கு ரெடி.