Butter Beans Kuzhambu Recipe: மட்டன் குழம்பை மிஞ்சும் சுவையில் பட்டர் பீன்ஸ் குழம்பு செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
பட்டர் பீன்ஸ் குழம்பு எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
செப்டம்பர் 17, சென்னை (Kitchen Tips): மதியம் வீட்டில் உள்ளவர்களுக்கு சுவையான குழம்பு செய்து சாப்பிட விரும்பினால், பட்டர் பீன்ஸ் (Butter Beans) வைத்து அதில் சூப்பராக குழம்பு செய்து சாப்பிடலாம். இந்த பட்டர் பீன்ஸ் குழம்பு சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியாக இருக்கும். இதனை மிகவும் சுலபமான முறையில் செய்து விடலாம். இந்தக் குழம்பு செய்வதற்கு காய்கறிகள் ஏதும் தேவையில்லை. தக்காளி, வெங்காயம் இருந்தால் மட்டும் போதும். இவற்றை சூடான சாதத்துடன் வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். அப்படிப்பட்ட பட்டர் பீன்ஸ் குழம்பு (Butter Beans Kuzhambu) எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம். Aval Urundai Recipe: அவல் உருண்டை சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
பட்டர் பீன்ஸ் - 1 கப்
சின்ன வெங்காயம் - 15
தேங்காய் பால் - 1 கப்
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
குழம்பு பொடி - 2 கரண்டி
மிளகாய் தூள் - 1 கரண்டி
கடுகு - 1 கரண்டி
கரம் மசாலாத்தூள் - முக்கால் கரண்டி
வெந்தயம் - அரை கரண்டி
மஞ்சள் தூள் - கால் கரண்டி
புளி சாறு - கால் கப்
பூண்டு - 7 பல்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு, தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில், பட்டர் பீன்ஸ் தோலை உரித்து நன்கு கழுவிக்கொள்ளவும். இப்போது ஒரு பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து, கழுவி வைத்த பட்டர் பீன்ஸ், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு இறக்கவும்.
- இதனை தண்ணீருடன் சேர்த்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து, ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
- பிறகு அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன், அதில் பொடியாக நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும். தக்காளி நன்கு மசிந்தவுடன், அதில் கரமசாலா தூள், மிளகாய் தூள் குழம்பு பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- அதன் பிறகு இதில் எடுத்து வைத்து, வேகவைத்த பட்டர் பீன்ஸை தண்ணியுடன் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். ஓரளவு கெட்டியாக வந்ததும் அதில் கரைத்து வைத்த புளி சாற்றை சேர்க்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கொள்ளவும்.
- பிறகு இதில் தேங்காய் பால் சேர்க்கவும். குழம்பிலிருந்து என்னைப் பிரிந்து வந்தவுடன் அடுப்பை அணைக்க வேண்டும். இறுதியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலை தூவிவிடவும். அவ்வளவுதான் சுவையான பட்டர் பீன்ஸ் குழம்பு ரெடி.
(The above story first appeared on LatestLY on Aug 16, 1694 05:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

