செப்டம்பர் 16, சென்னை (Kitchen Tips): அவல் உருண்டை என்பது அவல், சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் நெய் ஆகியவற்றை கலந்து உருண்டைகளாக பிடித்து தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய இனிப்பு உருண்டை ஆகும். இது ஒரு பழமையான மாலை நேர சிற்றுண்டியாகும். அவல் உருண்டை (Aval Urundai) வீட்டிலேயே எளிய முறையில் சுலபமாக எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
அவல் - 1 கப்
பொட்டுக்கடலை - அரை கப்
சர்க்கரை - கால் கப்
தேங்காய் - 1 மூடி
நெய் - அரை கப்
ஏலக்காய்தூள் - அரை தேக்கரண்டி
முந்திரி, கிஸ்மிஸ் - 10. Pepper Rasam Recipe: காரசாரமான மிளகு ரசம் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
செய்முறை:
- முதலில் அவல், பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து வெறும் பாத்திரத்தில் லேசாக வறுத்து, மிக்ஸியில் மாவாக அரைத்து சலித்துக் கொள்ளவும்.
- பின்பு, சர்க்கரையையும் மிக்ஸியில் நைஸாக அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து, தேங்காயை துருவி வெறும் பாத்திரத்தில் பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
- முந்திரி பொடித்து, கிஸ்மிஸ் சேர்த்து வறுக்கவும். சலித்த மாவு, சர்க்கரை, வறுத்த தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து ஒன்றாக கலந்துகொள்ளவும்.
- இறுதியாக நெய்யைச் சூடாக்கி கலந்த மாவில் ஊற்றி சூடாக இருக்கும் போதே உருண்டை பிடிக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான அவல் உருண்டை ரெடி.